IND vs AUS : நேதன் லயனை சமாளித்து அடித்து நொறுக்க அவர் ப்ளேயிங் லெவன்ல கண்டிப்பா இருக்கனும் – ரவி சாஸ்திரி அதிரடி

Shastri
- Advertisement -

உலகின் டாப் 2 கிரிக்கெட் அணிகளாக கருதப்படும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று பைனலுக்கு தகுதி பெறும் என்பதில் இந்திய ரசிகர்கள் உறுதியுடன் இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்து 2004 முதல் தொடர்ந்து தோல்விyai சந்தித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க போராட உள்ளது. முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சவாலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவது போலவே நேதன் லயன் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

அடித்து நொறுக்க:
ஏனெனில் சுழலுக்கு சாதகமில்லாத ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்து ஷேன் வார்னேவுக்கு பின் தனது மிகச்சிறந்த திறமையால் கடந்த 10 வருடமாக நிரந்தர இடத்தை பிடித்து விளையாடி வரும் அவர் 450க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அஷ்வின் போலவே தற்சமயத்தில் உலக அளவில் சிறந்து விளங்கும் முதன்மை ஸ்பின்னரில் ஒருவராக இருக்கிறார். அத்துடன் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்களை வரலாற்றில் பலமுறை தனது மாயாஜால சுழலில் சிக்க வைத்துள்ள அவர் இம்முறையும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுப்பவராகவே பார்க்கப்படுகிறார்.

 

- Advertisement -

Suryakumar Yadav 1

இந்நிலையில் நேதன் லயன் போன்ற தரமான ஆஸ்திரேலிய பவுலர்களை சூரியகுமார் யாதவால் மட்டுமே அதிரடியாக எதிர்கொண்டு திறம்பட சமாளித்து வெற்றியை தீர்மானிக்கும் 30 – 40 ரன்களை விரைவாக எடுக்க முடியும் என்று தெரிவிக்கும் ரவி சாஸ்திரி நிச்சயமாக அவர் 11 பேர் அணியில் இருக்கும் வேண்டுமென்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் டெஸ்ட் போட்டியில் சூரியகுமார் யாதவ் நிச்சயமாக இருக்கலாம். அவர் இங்கேயும் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்”

“என்னை கேட்டால் இத்தொடரில் அவர் மட்டுமே அதிரடியாக செயல்படக் கூடியவராக இருப்பார். குறிப்பாக நேதன் லயன் போன்ற ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ள நினைக்கும் அவர் எப்போதும் ரன்களை குவிப்பதற்கும் ஸ்ட்ரைக்கை மாற்றுவதற்கும் முயற்சிப்பார். இந்தியாவில் நீங்கள் சாதிக்க ஸ்ட்ரைக்கை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும். அதாவது அடிக்கடி நீங்கள் ரன்களை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாறாக மெய்டன் உட்பட அதிக பந்துகளை எதிர்கொண்டால் அதுதான் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே அந்த இடத்தில் சூரியகுமார் மிகவும் பயனுள்ளவராக இருப்பார்”

- Advertisement -

“குறிப்பாக தாறுமாறாக சுழலும் பிட்ச்சில் கூட அவரால் அதிரடியாக போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 30 – 40 ரன்கள் எடுக்க முடியும். அவரால் மிக விரைவாக எதிரணியை சிதறடித்து தொல்லை கொடுக்க முடியும். எனவே இந்த கோணத்தில் இந்திய அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவ நரகத்துக்கு அனுப்பிடுவோம், பகிரங்கமாக எச்சரித்த மியான்தத்துக்கு வெங்கடேஷ் பிரசாத் நக்கல் பதிலடி

அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் சூரியகுமார் யாதவ் சமீபத்திய ரஞ்சி கோப்பையிலும் 3 போட்டிகளில் 223 ரன்களை 95.70 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். எனவே ரிஷப் பண்ட் இல்லாத சமயத்தில் அவரது இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு தொல்லை கொடுப்பவராக சூரியகுமார் யாதவை தவிர்த்து வேறு ஒரு வீரர் இருக்க முடியாது என்றால் மிகையாகாது.

Advertisement