- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நியூஸிலாந்தும் 4க்கு 4 பதிலடி வெச்சுருக்காங்க.. ஃபைனலில் இந்தியாவுக்கு வெற்றி ஈஸியா இருக்காது.. வாசிம் ஜாபர்

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே லீக் சுற்றில் இதே துபாயில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது.

அதே போல இந்த இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் 2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிகளில் இந்திய அணியை தோற்கடித்து நியூசிலாந்து கோப்பைகளை வென்றது. எனவே ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து தோற்றதில்லை என்பது ரசிகர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கிறது.

- Advertisement -

ஈஸியா இருக்காது:

இந்நிலையில் லீக் சுற்றில் தோற்கடித்ததைப் போல இந்திய அணி இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்தை தோற்கடிக்கலாம் என்று சாதாரணமாக எண்ணக்கூடாது என முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் அக்கறையுடன் எச்சரித்துள்ளார். ஏனெனில் துபாய் சூழ்நிலைகளை தற்போது இந்தியாவைப் போலவே நன்றாக அறிந்துள்ள நியூஸிலாந்திடமும் 4 ஸ்பின்னர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் திறமை நியூசிலாந்திடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி வாசிம் ஜாபர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எளிதாக தோற்கடித்தது. ஆனால் இம்முறை வெற்றி எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் நியூசிலாந்து தற்போது கொஞ்சம் நன்றாகத் தயாராகி வருவார்கள். ஏற்கனவே துபாயில் விளையாடியுள்ளதால் அவர்களும் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள்”

- Advertisement -

சவாலான ஃபைனல்:

“அவர்களது பேட்டிங் வரிசையில் நல்ல ஆழம் இருக்கிறது. துபாயில் நிலவும் சூழ்நிலைகளுக்கு பொருந்தக்கூடிய பவுலிங் அவர்களிடமும் இருக்கிறது. கடந்தப் போட்டியிலேயே மிட்சேல் சான்ட்னர் நன்றாக பவுலிங் செய்து கேப்டன்ஷிப் செய்தார். மேலும் அவர்களிடம் மைக்கேல் பிரேஸ்வெல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஸ்பின் பவுலர்களாக உள்ளனர்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் கோப்பையை ஜெயிச்சாலும் இல்லனாலும் ரோஹித் சர்மாவுக்கு போடப்பட்டுள்ள எண்டு கார்டு – விவரம் இதோ

“அந்த வகையில் மற்ற அணிகளிடம் இல்லாத நிறைய ஆப்ஷன்கள் நியூசிலாந்து அணியிடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல 2019 உலகக் கோப்பை உட்பட ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து எப்போதுமே இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்படுவது வாடிக்கையாகும். எனவே இம்முறையும் நியூசிலாந்தை குறைத்து மதிப்பிடாமல் இந்தியா வெற்றிக்கு சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

- Advertisement -