சாம்பியன்ஸ் கோப்பையை ஜெயிச்சாலும் இல்லனாலும் ரோஹித் சர்மாவுக்கு போடப்பட்டுள்ள எண்டு கார்டு – விவரம் இதோ

Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்ததால் அவரது கேப்டன்சி மீது பெரியளவில் விமர்சனம் இருந்தது.

ரோஹித் சர்மா விடயத்தில் பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு :

ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு ஆதரவு வழங்கி வந்தது. இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது லீக் சுற்று போட்டிகளில் இருந்து தோல்வியையே சந்திக்காமல் வெற்றிகரமாக பயணித்து வந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மார்ச் 9-ஆம் தேதி பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றினாலும் அந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏனெனில் தற்போது 37 வயதாகும் அவர் இனி எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக கூற முடியாது என்பதால் எதிர்கால கேப்டனை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டி20 உலக கோப்பையை கைப்பற்றிய பின்னர் டி20 வடிவத்திலிருந்து ஓய்வு அறிவித்த ரோஹித் அதேபோன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றினால் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று விரும்புவதால் இப்போதைக்கு அவர் ஓய்வு பெற மாட்டார் என்றே தெரிகிறது. இருந்தாலும் ரோகித் சர்மாவின் முடிவு பற்றி கேட்கப்பட்ட போது நான் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்றும் சில ஆண்டுகள் விளையாட இருப்பதாகவும் அவர் நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறப்படுவது.

இதையும் படிங்க : மழையால் பைனல் மேட்ச் கைவிடப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? – ரூல்ஸ் சொல்வது என்ன?

இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றினாலும் அந்த தொடர் முடிந்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலக நேரிட வாய்ப்புள்ளது. அதே வேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement