நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மற்றும் அரையிறுதி சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
மழையால் பைனல் மேட்ச் ரத்தானால் கோப்பை யாருக்கு? :
எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவேளை போட்டி மழையால் முற்றிலுமாக கைவிடப்பட்டால் கோப்பை யாருக்கு? என்கிற கேள்விக்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
மேலும் இந்த இறுதி போட்டியானது மழையால் ரத்தாகும் பட்சத்தில் கோப்பை யாருக்கு அளிக்கப்படும்? அதற்கு ஐசிசி கூறும் விதிமுறைகள் என்ன என்பது குறித்த தெளிவான தகவல்களையும் இங்கு காணலாம்.
அந்த வகையில் இந்த இறுதி போட்டியானது ஒருவேளை போட்டி நாளான மார்ச் 9-ஆம் தேதி மழையால் பாதிக்கப்பட்டால் இரு அணிகளும் தலா 25 ஓவர்கள் வரை விளையாடும் அளவிற்கு அவகாசம் வழங்கப்படும். அப்படி அவகாசம் வழங்கப்படும் போதும் மீண்டும் மீண்டும் மழை குறுக்கிட்டால் அன்று போட்டி ரத்து செய்யப்படும். அதன்பிறகு மார்ச் 10-ஆம் தேதி “ரிசர்வ் டே” நாள் அன்று மீண்டும் இறுதிப்போட்டி நடைபெறும்.
ஆனால் அன்றும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் குறைந்தது 25 ஓவர்கள் வரை மீண்டும் அவகாசம் வழங்கப்படும். அப்போதும் மழை குறுக்கிட்டு இந்த போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டால் இரு அணிகளுக்குமே கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். கடந்த 2002-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்டபோது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பைனல் “டை” ஆனால் என்ன நடக்கும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?
அதேபோன்றுதான் இம்முறையும் போட்டி கைவிடப்பட்டால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என்று ஐசிசி ரூல்ஸ் கூறுகிறது. ஆனாலும் துபாயில் மார்ச் 9-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்பதனால் போட்டி முழுவதுமாக நடைபெறும் என்று தெரிகிறது.



