சாம்பியன்ஸ் டிராபி பைனல் “டை” ஆனால் என்ன நடக்கும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

IND vs NZ
- Advertisement -

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் துவங்கிய ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வர காத்திருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இறுதிப்போட்டி “டை”யானால் என்ன நடக்கும்? :

இந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டி துபாய் மைதானத்தில் ஞாயிற்று கிழமை மதியம் இந்திய நேரப்படி 1 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐசிசி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி “டை”-யில் முடிந்தால் என்ன நடக்கும்? அதற்கு ஐசிசி என்ன விதிமுறையை வகுத்துள்ளது? என்பது குறித்த முழு தகவலை இந்து பதிவில் காணலாம்.

அந்த வகையில் எப்போதுமே ஒரு தொடர் நடத்தும் அமைப்புதான் அந்த தொடரின் இறுதி கட்ட முடிவுகளை எடுக்கும். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி இந்த தொடரை நடத்துவதால் ஐசிசிக்கு இந்த தொடரின் முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் உள்ளது.

- Advertisement -

இந்த தொடரினை பொருத்தவரை இறுதிப் போட்டியில் இரு அணிகளுமே சரியா சமமான ஸ்கோர்களை அடித்து போட்டி “டை”யில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்தப்பட்டு அந்த சூப்பர் ஓவரிலும் ஸ்கோர் சமநிலையில் இருந்தால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும். இப்படி முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ஜெயிக்கப்போவது யார்? இந்தியாவா? நியூஸிலாந்தா? – வாசிம் அக்ரம் கணிப்பு

மேலும் ஒருமுறை சூப்பர் ஓவரில் பங்கேற்கும் பேட்ஸ்மனோ அல்லது பவுலரோ அடுத்த சூப்பர் ஓவரில் விளையாடக்கூடாது. புதிய, புதிய வீரர்களை வைத்துதான் அடுத்தடுத்து சூப்பர் ஓவர்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஐசிசி கூறியுள்ளது. இதன் காரணமாக போட்டி “டை”யானால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement