சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ஜெயிக்கப்போவது யார்? இந்தியாவா? நியூஸிலாந்தா? – வாசிம் அக்ரம் கணிப்பு

Wasim Akram
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மாபெரும் இறுதிப்போட்டியானது நாளை மறுதினம் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கிறது.

இறுதிப்போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? :

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு ஐசிசி தொடர்களில் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஆறுமுறை வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -

இதன் காரணமாக எந்த அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெறும்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கருத்தினை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இரண்டு அணிகளுக்குமே எந்த மாதிரியான ஆடுகளும் கிடைக்கப் போகிறது என்பது நன்றாக தெரியும். இந்தியா இதுவரை இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணியை எதிர்த்து எவ்வாறு விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும்.

- Advertisement -

எனவே இந்த போட்டி சுலபமான ஒன்றாக இருக்காது. என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் இந்தியாவுக்கு 60 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், நியூசிலாந்து அணிக்கு 40% வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணியை போன்று நியூசிலாந்து அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள் என வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சச்சின் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

இந்த தொடர் முழுவதுமே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாய் மண்ணில் மட்டுமே விளையாடி வருவதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கிறது என்று பலரும் பேசிவரும் வேளையில் நியூசிலாந்து அணிக்கும் 40% வெற்றி வாய்ப்பு இருப்பதாக வாசிம் அக்ரம் பேசியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement