சச்சின் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுப் போட்டிகளில் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தினை பிடித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

சச்சின், ஜாஹீர் கான் சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் விராட் கோலி :

அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியதோடு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கும் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜாகிர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் படைக்க இருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியில் அதிக முறை விளையாடிய வீரர்களாக ரிக்கி பாண்டிங் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் முதலிடத்தில் ஆறு முறை ஐசிசி தொடர்களின் இறுதி போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளனர்.

இதையும் படிங்க : ஃபைனலுக்கு போயும் 100% தயார் இல்ல.. இந்த 3 விஷயங்களில் இந்திய அணியில் முன்னேற்றம் வேணும்.. கவாஸ்கர் பேட்டி

அவர்களுக்கு அடுத்து ஜாகிர் கான், சச்சின் டெண்டுல்கர், முரளிதரன், மெக்ராத் ஆகியோர் ஐந்து முறை ஐசிசி தொடர்களின் இறுதி போட்டியில் விளையாடியுள்ள வேளையில் விராட் கோலியும் இந்த பட்டியலில் ஐந்தாவது முறையாக ஐசிசி தொடர்களின் இறுதி போட்டியில் விளையாட இருக்கிறார்.

Advertisement