சொந்த ஊர்லேயே சொதப்புனா சச்சின் மாதிரி சிலையா வைப்பாங்க.. வம்படியாக கலாய்த்த வாகனுக்கு வாசிம் ஜாஃபர் பதிலடி

Micheal Vaughan 3
Advertisement

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோர் ஓய்வுக்கு பின்பும் களத்திற்கு வெளியே அடிக்கடி மோதுவதை வழக்கமாக வைத்திருப்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகளின் போது இருவரும் அடிக்கடி கிண்டலடித்து கலாய்த்து நட்பு ரீதியாக மோதிக் கொள்வதை கடந்த பல வருடங்களாக வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக பெரும்பாலான சமயங்களில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே இந்தியாவை வைப்பதும் குறை சொல்வதையும் மைக்கேல் வாகன் வழக்கமாக வைத்திருப்பார். அதற்கு கடைசியில் வென்ற பின் வாஷிம் ஜாஃபர் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கலாய்த்து தக்க பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

சச்சின் போல சிலை:
அந்த வரிசையில் தற்போது நடைபெற்ற வரும் உலக கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியை மைக்கேல் வாகன நேரடியாக பார்த்தார். அப்போட்டிக்கு முன்பாக தான் சச்சின் டெண்டுல்கருக்கு அம்மைதானத்தில் முழு உருவ சிலையும் திறக்கப்பட்டது. அந்த நிலைமையில் வான்கடே மைதானத்தில் வாசிம் ஜாஃபரின் செயல்பாடுகளை புள்ளி விவரங்களுடன் தோன்றி எடுத்து மைக்கேல் வாகன் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு.

“நேற்று வான்கடே மைதானத்தில் இருந்தது நல்ல உணர்வை கொடுத்தது. இந்தியாவில் இது பேட்டிங் செய்ய நல்ல மைதானமாகும். ஆனால் இந்த மகத்தான மைதானத்தில் உள்ளூர் வீரரான வாஷிங் ஜாபர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 7.75 என்ற சராசரியை தான் வைத்துள்ளார்” என்று பதிவிட்டார். அத்துடன் க்ரிக்பஸ் இணையத்தில் தற்போது வரணையாளராக இருக்கும் அவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ட்விட்டரில் இந்தப் பதிவை போடுவதற்கு முன்பாக வீடியோ வடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வான்கடே மைதானத்தில் உள்ளூர் வீரரான வாசிம் ஜாஃபர் 7.75 என்ற அபாரமான சராசரியை கொண்டிருந்தும் ஏன் சச்சின் போல சிலை வைக்கவில்லை” என்று வெளிப்படையாகவே கலாய்த்து சிரித்தார். ஆனால் அதற்காக அசராத வாசிங் ஜாஃபர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “ஆம் மைக்கேல் வான்கடே பேட்டிங்க்கு சாதகமான மைதானம். அதில் சில டெஸ்ட் போட்டிகளை தவற விட்டதை நான் மோசமாக உணர்கிறேன். அதை நான் அதிக சவால்களை விரும்பியதால் இருக்கலாம்”

இதையும் படிங்க: என்னோட போகஸ் எல்லாம் அதுமட்டும் தான். அதான் விக்கெட் ஈஸியா கிடைக்குது – ஆட்டநாயகன் முகமது நபி பேட்டி

“குறிப்பாக சொந்த மண் மற்றும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் இரட்டை சதங்கள் அடிப்பது அல்லது முதல் தர கிரிக்கெட்டில் 200 அல்லது 300 ரன்கள் அடிப்பது போன்ற சவால். ஆனால் அந்த உணர்வு எதுவும் உங்களுக்கு தெரியாது என்பதால் பரவாயில்லை” என்று கூறியுள்ளார். அதாவது மைக்கேல் வாகன் தம்முடைய கேரியரில் உள்ளூரில் கூட ஒரு முறை கூட 200+ ரன்கள் அடித்ததில்லை என்பதை அவருக்கு பதிலடியாக வாசிம் ஜாஃபர் கொடுத்துள்ளார்.

Advertisement