என்னோட போகஸ் எல்லாம் அதுமட்டும் தான். அதான் விக்கெட் ஈஸியா கிடைக்குது – ஆட்டநாயகன் முகமது நபி பேட்டி

Nabi
- Advertisement -

ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 46.3 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே குவித்ததது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி மூன்று விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதே வேளையில் நெதர்லாந்து அணி சார்பாக 4 வீரர்கள் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 181 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹமத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 9.3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் முகமது நபி கூறுகையில் : நான் என்னுடைய பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். சரியான லைன் மற்றும் லென்ந்தில் வீசினால் நன்றாக இருக்கும் என்பதனால் அதில் நிறையவே பயிற்சி எடுத்து பந்து வீசி வருகிறேன்.

- Advertisement -

அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் அதிகளவு டாட் பால்களை வீச வேண்டும் என்ற திட்டம் எப்பொழுதுமே என்னிடம் இருக்கும். ஏனெனில் நான் நிறைய டாட் பால்களை வீசும் போது அது விக்கெட் விழுவதற்கு வாய்ப்பாகவும் அமையும். அதேபோன்று நான் என்னுடைய லைன் மற்றும் லென்ந்தில் என்னுடைய திட்டத்திற்கு ஏற்ப சில கோணங்களில் பந்து வீசி வருகிறேன். அப்படி நான் வீசும் பந்துகள் சரியான இடத்தில் பிட்ச் ஆவதால் எனக்கு விக்கெட்டுகள் கிடைக்கின்றன.

இதையும் படிங்க : ரொம்பவே கஷ்டப்படற அவங்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். நெதர்லாந்தை வீழ்த்திய பிறகு – ஆப்கன் கேப்டன் நெகிழ்ச்சி

எப்போதுமே எனக்கு எதிராக விளையாடும் வீரர்களை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்புகிறேன். அதன் காரணமாகவே என்னால் அதிக டாட் பால்களை வீச முடிகிறது. அதோடு குறைவான ரன்களையும் வழங்க முடிகிறது. இந்த 38 வயதிலும் நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்க என்னுடைய டயட் மற்றும் பயிற்சிகள் தான் காரணம். தற்போதும் என்னுடைய உடற்தகுதி சிறப்பாக இருப்பதாகவே உணர்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என முகமது நபி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement