அவருக்கு பாரமா இருக்காம.. தோனி அதையும் செஞ்சுருந்தா இன்னும் வசதியா இருக்கும்.. வாசிம் ஜாபர் அதிரடி

Wasim Jaffer
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக எம்எஸ் தோனி அறிவித்துள்ளார். ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 14 வருடங்களில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று 10 ஃபைனல்களில் விளையாடி 5 கோப்பைகளை வென்று கொடுத்து சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க முக்கிய பங்காற்றினார்.

ஆனால் 41 வயதை தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அணியின் நலன் கருதி அவர் தம்முடைய கேப்டன்ஷிப் பொறுப்பை இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

புதிய பாரம்:
இருப்பினும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட உள்ள தோனி புதிய கேப்டன் ருதுராஜ் வளரும் வரை முக்கிய முடிவுகளை எடுப்பதில் உறுதுணையாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் கேப்டன்ஷிப் பதவியில் விலகிய தோனி மொத்தமாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஏனெனில் தோனி இருந்தால் ருதுராஜால் சுதந்திரமாக செயல்பட்டு சொந்த முடிவுகளை எடுக்க முடியாது என்று வாஷிம் ஜாபர் கூறியுள்ளார்.

எனவே ருதுராஜை சுதந்திரமாக செயல்பட விடாமல் பாரமாக இருக்கும் முடிவையே தோனி எடுத்துள்ளதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது சரியான முடிவு என்று நான் கருதவில்லை. ஒருவேளை எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இல்லாமல் இருந்தால் இன்னும் நல்ல பலன் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற்று அருகில் இல்லாமல் இருப்பதே புதிய கேப்டனின் சூழ்நிலைகளை எளிதாக்கும்”

- Advertisement -

“ஆனால் தற்போது எம்எஸ் தோனி அருகில் இருப்பதால் புதிய கேப்டன் யாராக இருந்தாலும் வேலை கடினமாக இருக்கும். அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு தோனி சம்மதிக்கிறாரா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். எனவே ருதுராஜ் புதிய வாரிசாக வந்துள்ளார் என்பதை நாம் அறிவோம். அது போன்ற சூழ்நிலையில் அவர் தன்னுடைய சொந்த வழியில் முடிவுகளை எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : அதான் விதி’ன்னா அதை யாராலயும் மாற்ற முடியாது.. ஆர்சிபி அணி பற்றி ஏபிடி ஓப்பன்டாக்

“தோனி இல்லாமல் இருந்தால் மட்டுமே அவரால் முக்கிய முடிவுகளை இன்னும் எளிதாக எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்” என்று நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து மார்ச் 22 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் ருதுராஜ் தலைமையில் சிறப்பாக விளையாடிய சென்னை 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement