9க்கு 8 வெற்றி.. சாம்சன் மிரட்டல்.. சல்யூட் வைத்து லக்னோவை முடித்த ஜுரேல்.. ராஜஸ்தான் அபார சாதனை

LSG vs RR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 44வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே குவிண்டன் டீ காக் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 11/2 என ஆரம்பத்திலேயே லக்னோ தடுமாறியது. இருப்பினும் அப்போது களமிறங்கிய தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் அமைத்து லக்னோவை மீட்டெடுத்தது.

- Advertisement -

மிரட்டும் ராஜஸ்தான்:
அப்போது தீபக் ஹூடா அரை சதமடித்து 50 (31) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் 11 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அரை சதமடித்து கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 76 (48) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆயுஸ் பதோனி 18*, க்ருனால் பாண்டியா 15* ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் லக்னோ 196/5 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 197 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு 6 ஓவரில் 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஜோஸ் பட்லர் 34 (18) ரன்களிலும் ஜெய்ஸ்வால் 24 (18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரியான் பராக் 14 ரன்களில் அவுட்டானதால் 78/3 என ராஜஸ்தான் தடுமாறியது.

- Advertisement -

ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடியில் சஞ்சு அரை சதமடித்து ராஜஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அதே போல மறுபுறம் அசத்திய துருவ் ஜுரேல் முதல் ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்து ராணுவத்தில் பணியாற்றிய தன்னுடைய அப்பாவுக்கு சல்யூட் அடித்து கொண்டாடி சமர்ப்பித்தார்.

சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இதே போல அவர் சல்யூட் அடித்ததை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 71* (33) ரன்களும் ஜுரேல் 52* (34) ரன்களும் எடுத்தனர். அதனால் 19 ஓவரிலேயே 199/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: அவர் டீம்க்கு வந்த பர்ஸ்ட் நாள்ல இருந்து பிரமாதமா ஆடிட்டு வராரு.. வெற்றிக்கு பிறகு பாராட்டிய – ரிஷப் பண்ட்

இதையும் சேர்த்து 9 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அத்துடன் குஜராத்துக்குப் பின் (2022இல்) ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்ற 2வது அணி என்ற அபார சாதனையும் ராஜஸ்தான் படைத்தது. மறுபுறம் பேட்டிங்கில் 200+ ரன்கள் எடுத்த தவறிய லக்னோ சொந்த மண்ணில் தோற்றது.

Advertisement