ஐபிஎல் 2024 : அதான் விதி’ன்னா அதை யாராலயும் மாற்ற முடியாது.. ஆர்சிபி அணி பற்றி ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers 9
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. அதில் வலுவான சிஎஸ்கே அணியை பெங்களூரு தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக நிறைவு பெற்ற மகளிர் ஐபிஎல் 2024 தொடரில் ஸ்மிருத்தி மந்தனா தலைமையில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு சாதனை படைத்தது. குறிப்பாக கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியதால் ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் எழுந்தன. ஆனால் அதை உடைத்துள்ள மகளிர் ஆர்சிபி அணி புதிய வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:
எனவே அந்த உத்வேகத்துடன் ஆடவர் அணியும் இம்முறை கோப்பையை வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடம் மகளிர் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது போல் ஆடவர் அணியும் கோப்பையை வெல்வது விதியாக இருக்கலாம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வருடம் ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணியை வெல்வதை பொருத்திருந்து பாருங்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இது விதி. பெண்கள் அதைச் செய்தது போல் தற்போது பையன்களும் பார்ட்டிக்கு வர உள்ளார்கள். தடைகள் உடைந்தன. எனவே இதுவே அந்த வருடம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்து பாருங்கள்”

- Advertisement -

“விளையாட்டு ஒரு வேடிக்கையான விஷயம். இது கணிக்க முடியாதது. இல்லையெனில் அது சலிப்பாகி விடும். ஆடவர் ஆர்சிபி அணி ஒருமுறை கோப்பையை வென்றால் இன்னும் பல வெற்றிகள் கிடைக்கும். நம்பிக்கையுடன் நாம் வலிமையிலிருந்து வலிமைக்கு செல்கிறோம். இதே தொடரில் 9 சூப்பர் ஸ்டார் அணிகள் இருக்கின்றன. அதில் ஆர்சிபி அணியை தவிர்த்து மேலும் சில அணிகள் கோப்பையை வெல்லாமல் இருக்கின்றன”

இதையும் படிங்க: இது சர்ப்ரைஸ் கிடையாது.. தோனி அப்போவே சொல்லிருப்பாரு.. பாரத்தை ஏத்திடாதீங்க.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை

“அவர்களும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். நாங்களும் கடந்த காலங்களில் சிறந்த முயற்சியை கொடுத்தோம். இருப்பினும் 3 முறை நெருங்கியும் ஃபைனலில் தோல்வியை சந்தித்தோம். எங்களுக்கு அங்கும் இங்கும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதைத் தவற விட்டற்காக எங்களையே குறை சொல்ல வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக எங்களுடைய சீனியர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியம் முன்னோக்கி கொண்டு செல்லப்படும்” என்று கூறினார்.

Advertisement