இது சர்ப்ரைஸ் கிடையாது.. தோனி அப்போவே சொல்லிருப்பாரு.. பாரத்தை ஏத்திடாதீங்க.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு அஸ்வின் கோரிக்கை

Ashwin CSK.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் பெங்களூருவை தங்களுடைய சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. ஆனால் அந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள தோனி அந்த பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்ட தோனி தலைமையில் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்ற சிஎஸ்கே வெற்றிகரமான ஜொலிக்கிறது. ஆனால் 41 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி இந்த முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி ருதுராஜிடம் கடந்த வருடமே தோனி தெரிவித்திருக்கக்கூடும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அஸ்வின் கோரிக்கை:
அத்துடன் ஒரு சில தோல்விகளை சந்தித்ததும் உடனடியாக தோனியுடன் ஒப்பிட்டு விமர்சனங்களை செய்து ருதுராஜ் மீது பாரத்தை ஏற்ற வேண்டாம் என்றும் சிஎஸ்கே ரசிகர்களை அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது தவிர்க்க முடியாத முடிவு. தோனியை எனக்கு தெரியும். அவர் எப்போதும் அணியை முன்னணியில் வைப்பவர். அணியின் நலனை பற்றி சிந்திக்கக் கூடியவர்”

“அதனால் 2 வருடத்திற்கு முன்பே அந்த பொறுப்பை ஜடேஜாவிடம் அவர் ஒப்படைத்தார். தற்போது ருதுராஜிடம் கொடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் நாம் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவோம் என்று ருதுராஜ் நினைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தோனியை பற்றி எனக்கு தெரியும். அவர் கடந்த வருடமே இளம் வீரர்களுடன் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டே இந்த முடிவைப் பற்றி ருதுராஜிடம் சொல்லியிருப்பார்”

- Advertisement -

“எனவே இது ருதுராஜுக்கு ஆச்சரியமான முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக “நீங்கள் அனைத்தையும் பாருங்கள். உங்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன்” என்ற வகையில் அவரிடம் தோனி சொல்லியிருப்பார். ருதுராஜ் மிகவும் அமைதியான நல்ல மனிதர். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தோனி மகத்தான கேப்டன்களில் ஒருவர். எனவே அவருடைய இடத்தில் உடனடியாக ருதுராஜ் வெற்றிகளை பெற்றுக்கொடுப்பார் என்று நினைக்காமல் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? ஆன்லைன் வாயிலாக எவ்வாறு பாக்கலாம்? – விவரம் இதோ

“தோனியின் வெற்றிகள் ருதுராஜுக்கு பாரமாக இருக்கக்கூடாது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்ய அனுமதிப்பது அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் பொறுப்பாகும். ஆம் அவர் சில போட்டிகளில் தோல்விகளை சந்திக்கலாம். ஆனால் தோல்விகளை சந்திக்கும் போது தான் மகத்தான பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement