ஐ.பி.எல் போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? ஆன்லைன் வாயிலாக எவ்வாறு பாக்கலாம்? – விவரம் இதோ

IPL-2024
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது ஐபிஎல் தொடரானது இன்று மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரானது 42 வயதான சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அதோடு 2008-ஆம் ஆண்டு முதல் கடந்த 2023-ஆம் ஆண்டு வரை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக பயணித்து வந்த தோனி ஐந்து முறை கேப்டனாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி கொடுத்திருக்கும் வேளையில் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி ருதுராஜ் தலைமையில் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் வீரராகவே தோனியை வழியனுப்பும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

இதன் காரணமாக இன்று நடைபெறும் முதல் போட்டியிலிருந்தே தங்களது வெற்றி கணக்கை துவங்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டும். அதேபோன்று கடந்த 16 ஆண்டுகளாக கோப்பையை கைப்பற்றாமல் இருந்து வரும் பெங்களூரு அணி நீண்ட கால ஏக்கத்தை போக்கும் வகையில் இந்த ஆண்டு கோப்பையை குறிவைத்து தங்களது நகர்வுகளை செயல்படுத்த வருகிறது.

- Advertisement -

இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த ஐபிஎல் தொடரின் போட்டிகளை தொலைக்காட்சி வாயிலாகவும், ஆன்லைன் வாயிலாகவும் எப்படி பார்க்கலாம்? என்று குறித்த தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டுபிடிக்கலாம்.

இதையும் படிங்க : போட்டிக்கு ஒருநாள் முன்னதாக சி.எஸ்.கே புதிய கேப்டனை அறிவித்தது ஏன்? – வெளியான தகவல்

அதே போன்று ஆன்லைனில் ஜியோ சினிமா ஆப்பின் மூலம் இலவசமாக போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் மதியம் இருந்தால் போட்டி 3.30 மணிக்கும், இரவு இருந்தால் போட்டி 7.30 மணிக்கும் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement