போட்டிக்கு ஒருநாள் முன்னதாக சி.எஸ்.கே புதிய கேப்டனை அறிவித்தது ஏன்? – வெளியான தகவல்

Dhoni-and-Ruturaj
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது சீசனானது இன்று மார்ச் 22-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் கோலாகலமாக துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு ஒருநாள் முன்னதாக நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரபூர்வமாக சி.எஸ்.கே அணியின் நிர்வாகத்தின் மூலம் முறைப்படி அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

முதலில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனை இந்த முதல் போட்டியின் டாஸ் நிகழ்வின் போது தான் அறிமுகம் செய்யலாம் என்று தோனி நிலைத்ததாகவும் ஆனால் அது தவறாக போய்விடும் என்பதனாலே மாற்றம் நிகழ்ந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த வீரர் சென்னை அணியின் அடுத்த கேப்டனாக மாறப்போகிறார்? என்ற கேள்வி அதிகம் இருந்து வந்த வேளையில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதால் மீண்டும் கேப்டனான தோனி தற்போது எதிர்காலத்தை கணக்கில் கொண்டு ருதுராஜை கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.

- Advertisement -

எப்பொழுதுமே தனது முடிவுகளை திடீரென சத்தமில்லாமல் அறிவிக்கும் தோனி இந்த கேப்டன் அறிமுகத்தையும் முதல் போட்டியின் டாசின் போதே செய்யலாம் என்று நினைத்தாராம். ஆனால் இந்த போட்டிக்கு முன்பாகவே 10 அணிகளை சேர்ந்த கேப்டன்களும் கோப்பை அறிமுக விழாவிற்கு சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதால் அந்த நிகழ்விற்கு தோனி சென்று விட்டு அடுத்த நாள் கேப்டனை மாற்றுவது தவறு என்று நினைத்தே போட்டிக்கு முந்தைய நாளே ருதுராஜை கேப்டனாக நியமிக்க வேண்டுகோள் வைத்தாராம்.

இதையும் படிங்க : 2022இல் நாங்க ரெடியா இல்ல.. தோனி அதை சொன்னதும் மொத்த டீமும் கலங்கிடுச்சு.. பிளெமிங் உருக்கம்

அதன் காரணமாகவே ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டு தற்போது கோப்பை அறிமுக நிகழ்ச்சியிலும் பங்கேற்றாராம். அது தவிர்த்து இந்த தொடர் முழுவதுமே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பக்கபலமாக தோனி இருந்து செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement