2022இல் நாங்க ரெடியா இல்ல.. தோனி அதை சொன்னதும் மொத்த டீமும் கலங்கிடுச்சு.. பிளெமிங் உருக்கம்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஜாம்பவான் எம்.எஸ். தோனி விலகியுள்ளார். தற்போது 41 வயதை கடந்து விட்ட அவர் அணியின் நலன் கருதி வருங்காலத்தை கருத்தில் கொண்டு தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைப்பதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததைப் போலவே 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றவர். அதனால் சென்னை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள நிலையில் தோனி வெற்றிகரமான கேப்டனாக வரலாறு படைத்துள்ளார்.

- Advertisement -

கலங்கிய சிஎஸ்கே:
ஆனால் காலத்தின் கட்டாயத்தால் கடந்த வருடமே முழங்கால் வலியால் அவதிப்பட்ட அவர் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார். சொல்லப்போனால் 2022 சீசனிலேயே ஜடேஜாவிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஒப்படைத்தார். இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இல்லாததால் தடுமாறிய ஜடேஜா மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே ஒப்படைத்து விட்டார்.

இந்நிலையில் கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகுவதாக தோனி சொன்ன போது சிஎஸ்கே அணியின் உடைமாற்றும் அறையில் இருந்த பலரும் கண் கலங்கியதாக பயிற்சியளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். மேலும் 2022இல் அவர் கேப்டன்ஷிப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்த போது அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இல்லை என்றும் பிளமிங் கூறியுள்ளார். ஆனால் தற்போது இந்த நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறும் பிளேமிங் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தோனி அந்த செய்தியை உடைத்ததும் நிறைய உணர்ச்சிகள் இருந்தன. உடைமாற்றம் அறையில் நிறைய கண்ணீர் இருந்தது. அங்கே யாருடைய கண்களும் காய்ந்திருக்கவில்லை. அனைவரும் நெகிழ்ந்தனர். கடந்த முறை கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி மாற்றிய போது அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. அதே சமயம் ருதுராஜ்க்கு வாழ்த்துக்களும் இருந்தன”

“அவர் மிகவும் குரல் கொடுக்கும் நபரல்ல. ஆனால் அவர் நம்மை சரியான திசையில் வழி நடத்தும் குணங்களைக் கொண்டுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தோனி விலகிய போது அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இல்லை. அவர் எடுத்த முடிவு பயிற்சியாளர் குழுவில் அதிர்வை ஏற்படுத்தியது. அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது இப்போதைய முடிவுக்கான விதையை போட்டது. அப்போது செய்த தவறுகள் மீண்டும் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisement