- Advertisement -
உலக கிரிக்கெட்

என்னடா இது வாசிம் அக்ரமுக்கு வந்த சோதனை.. சச்சின் போல கெளரவித்து சொதப்பிய பாகிஸ்தான்?

பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வரலாற்றில் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். 1984 – 2003 காலகட்டங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடிய அவர் சச்சின் டெண்டுல்கர் உட்பட உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களுக்கும் சவாலைக் கொடுத்தார். கேப்டனாகவும் தம்முடைய நாட்டை தலைமைத் தாங்கிய அவர் 1999 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

மொத்தம் 414 டெஸ்ட், 502 ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் பாகிஸ்தானின் உச்சகட்ட நட்சத்திர ஜாம்பவான் வீரராக அறியப்படுகிறார். சுல்தான் ஆஃப் ஸ்விங் என்ற பெயரில் ரசிகர்களால் புகழப்படும் அவருக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரை போன்ற கௌரவத்தை பாகிஸ்தான் வழங்கியுள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்து 100 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சச்சின் போன்ற கெளரவம்:

எனவே அவருடைய சொந்த ஊரான மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலையை வைத்து மும்பை வாரியம் கௌரவித்தது. அதே போல பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகரில் இருக்கும் நியாஸ் மைதானத்தில் பாகிஸ்தான் வாரியம் வாசிம் அக்ரமின் முழு உருவச்சிலையை உருவாக்கி கௌரவித்தது. அந்த சிலை கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

அது பற்றிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதைப் பார்த்த அந்த சிலைப் வாசிம் அக்ரம் போல இல்லை என்று பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மாறாக பிரபல ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் போல இருப்பதாக பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

சொதப்பிய பாகிஸ்தான்:

மறுபுறம் அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் என்னடா இது ஜாம்பவான் வாசிம் அக்ரமுக்கு வந்த சோதனை என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெற்று முடிந்தது. அந்த தொடரில் ஐசிசியிடம் பல கோடி ரூபாய்களை நிதியாகப் பெற்ற பாகிஸ்தான் தங்களுடைய மைதானங்களை புதுப்பித்தது.

இதையும் படிங்க: நியாயமா ஸ்ரேயாஸ் என் கன்னத்தில் அறைஞ்சுருக்கனும்.. ஃபைனலில் கணக்கு மிஸ்ஸாகிடுச்சு.. சசாங் பேட்டி

ஆனால் கடைசியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழையை சமாளிப்பதற்கான வசதிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அந்தத் தொடரை நடத்தியதில் பாகிஸ்தான் வாரியத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த தொடரில் சொதப்பியதைப் போலவே தற்போது தங்களுடைய ஜாம்பவான் வீரருக்கு சிலையை வைப்பதிலும் பாகிஸ்தான் உள்ளூர் வாரியம் சொதப்பியுள்ளது என்று சொல்லலாம்.

- Advertisement -