ஐபிஎல் 2025 கிரிக்கெட் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்று சாதனை படைத்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து ஒரு வழியாக பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் ஃபைனலில் வெறும் ஒரு சிக்சர் வித்தியாசத்தில் கோப்பையை கோட்டை விட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 18வது வருடமாக ஏமாற்றத்தை சந்தித்தது.
குறிப்பாக கடைசி நேரத்தில் சசாங் சிங் 61* (30) ரன்களை விளாசி வெறித்தனமாக போராடினார். இருப்பினும் ஒரு பந்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வியை சந்தித்தது. அதற்கு முன் குவாலிபயர் 2 போட்டியில் மும்பைக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் 86* ரன்களை அடித்து பஞ்சாப்பை வெற்றிப் பெற வைத்தார்.
கன்னத்தில் அறஞ்சுருக்கனும்:
இருப்பினும் கடைசி நேரத்தில் களமிறங்கிய சசாங் சிங் ரன் அவுட்டாகி பஞ்சாப்பின் வெற்றியைப் பறிகொடுக்கப் பார்த்தார். அதன் காரணமாக கோபமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியின் முடிவில் தம்மை பார்க்க வந்த சசாங் சிங்கிடம் “என் முகத்தில் விழிக்காதே” என்று சொன்னது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நியாயமாகப் பார்த்தால் ஸ்ரேயாஸ் தம்முடைய கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும் என்று சசாங் சிங் கூறியுள்ளார்.
ஃபைனலில் கணக்குப் போட்டு விளையாடியும் கடைசி பந்தில் வெற்றி தவறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஆதங்கத்துடன் பேசியது பின்வருமாறு. “அந்த கோபத்துக்கு நான் தகுதியானவன். ஐயர் என்னுடைய கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும். ஃபைனல் போட்டிக்கு இன்றைய நாள் வரை என்னுடைய அப்பா என்னிடம் பேசவில்லை”
தவறிய வெற்றி:
“அந்த முக்கியமான நேரத்தில் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ரேயாஸ் சொன்னார். இருப்பினும் அன்று இரவு என்னை உணவு விருந்துக்கு அவர் அழைத்துச் சென்றார். மற்ற கேப்டன்களிடம் பேசிய நான் அவர்களைப் பார்த்துள்ளேன். என்னைப் பொறுத்த வரை ஸ்ரேயாஸை தவிர்த்து உலக கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் இல்லை. அவர் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து சமமாக நடத்தினார்”
இதையும் படிங்க: ஷேன் வார்னே மாதிரி குல்தீப் அதை யூஸ் பண்ணி கலக்குவாறு.. இங்கிலாந்தில் சான்ஸ் கொடுங்க.. பரத் அருண்
“எங்களுடைய இளம் வீரர்கள் அவரை கூலான மனிதராக பார்ப்பார்கள். அவர் உங்களிடம் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று போட்டியின் போது சொல்லக்கூடிய ஒரே கேப்டன் ஆவார். அது சரியான ஆலோசனையாக இருக்கும் பட்சத்தில் அவர் அதை ஏற்பார். இது அரிதானது. ஃபைனலில் புவனேஸ்வரிடம் 19வது ஓவரில் 16 – 17 ரன்களை அடித்து 20வது ஓவரில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் 13 ரன்கள் மட்டுமே கிடைத்ததால் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது” என்று கூறினார்.



