ஆசிய கண்டத்தில் வேலையாகாது.. அதை மட்டும் வெச்சு கோப்பைய கொடுக்காதீங்க.. ஐசிசிக்கு அக்ரம் கோரிக்கை

Wasim Akram 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக பேட்டிங் செய்த இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அந்த அணி உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

அதனால் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறையாவது சொந்த மண்ணில் நிறுத்தி 2011 போல கோப்பையை வெல்வோமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மெகா ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும் குறிப்பாக அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் சிறப்பாக செயல்பட்டதால் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா இம்முறை கண்டிப்பாக வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

நாக் அவுட்டில் மாத்துங்க:
ஆனாலும் துரதிஷ்டவசமாக முக்கிய நேரத்தில் சொதப்பிய இந்திய அணியின் வெற்றியை சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா பறித்து சென்றது. இந்நிலையில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் டாஸை வைத்து போட்டியை துவக்கும் முறை மாற்றப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய கண்டத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் சேசிங் செய்வது எளிதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த யுக்தியை பயன்படுத்தியே இப்போட்டியில் ஆஸ்திரேலியா எளிதாக வென்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “காலிருதி மற்றும் அரையிறுதி போன்ற ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் நான் இதை விரும்புகிறேன். அதாவது இந்த போட்டிகளில் டாஸ் வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடாது. ஆஸ்திரேலியாவில் வேண்டுமானால் அது முக்கியமாக இருக்கலாம்”

- Advertisement -

“ஏனெனில் அங்கு இரவு நேரத்தில் ஸ்விங் நகர்வுகள் இருக்கும். ஆனால் ஆசிய கண்டத்தில் மாலை நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய வேலையை செய்வது எளிதாக உணர்வார்கள். ஏனெனில் இங்கே பனி அதிகமாக இருக்கும். இரு அணிகளுமே இத்தொடரில் கடினமாக விளையாடி ஃபைனலுக்கு வந்தார்கள். அந்த சூழ்நிலையில் போட்டி இரு அணிக்கும் சமமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஆஸி வெற்றியை கொண்டாடிய பாபர்.. அப்ரிடி அனுதாபம்.. இந்தியாவை சோக்கர் என கலாய்க்கும் பாக் ரசிகர்கள்

“மாறாக போட்டி டாஸ் அடிப்படையில் தேர்வு செய்யப்படக்கூடாது. இது பெரும்பாலான சமயங்களில் எனக்கு அதிருப்தியை கொடுக்கிறது” என்று கூறினார் அதே சமயம் ஃபைனலில் ஆஸ்திரேலிய அணியினர் 25 ரன்கள் சேமிக்கும் அளவுக்கு ஃபீல்டிங் துறையில் சிறப்பாக விளையாடி வென்றதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். அது போக ஐசிசி தொடர்களில் செமி ஃபைனலுக்கு பதிலாக ஐபிஎல் போல ப்ளே ஆஃப் சுற்று வடிவத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் ஐசிசி’யிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement