ஆஸி வெற்றியை கொண்டாடிய பாபர்.. அப்ரிடி அனுதாபம்.. இந்தியாவை சோக்கர் என கலாய்க்கும் பாக் ரசிகர்கள்

Babar Azam Shaheen
- Advertisement -

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியாவை அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக முன்னேறி சாதனை படைத்தது.

அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை தூளாக்கியது. குறிப்பாக ரோகித் சர்மா முதல் பெஞ்சில் அமர்ந்திருந்து திடீரென வாய்ப்பு பெற்ற ஷமி வரை அனைவருமே அபாரமாக செயல்பட்டதால் இம்முறை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உச்சகட்டமாக இருந்தது.

- Advertisement -

கலாய்க்கும் பாக் ரசிகர்கள்:
ஆனால் முக்கியமான ஃபைனலில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை தாரை வார்த்தது. மறுபுறம் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்த ஆஸ்திரேலியா அதன் பின் கொதித்தெழுந்து அபாரமாக விளையாடி இந்தியாவை வீழ்த்தி தங்களுடைய அலமாரியில் 6வது கோப்பையை அடுக்கியது.

இந்நிலையில் 6வது கோப்பையை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளது பின்வருமாறு. “வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா. ஃபைனலில் என்ன ஒரு அபாரமான செயல்பாடு” என்று பதிவிட்டுள்ளார். குறிப்பாக தங்களுக்கு 8வது முறையாக உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்து செமி ஃபைனல் சுற்றுக்கு செல்ல விடாமல் செய்த இந்தியாவின் தோல்வியை மறைமுகமாக கொண்டாடும் முறையில் அவர் இப்படி பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய இந்தியாவைப் பற்றி அவர் அந்த பதிவிலும் அல்லது மேற்கொண்டு எந்த பதிவிலும் ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. இருப்பினும் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மற்றொரு நட்சத்திர வீரர் சாகின் அப்ரிடி இந்தியாவுக்கும் சேர்த்து ட்விட்டரில் அனுதாபமான பாராட்டை தெரிவித்துள்ளது பின்வருமாறு. “உலகக்கோப்பையை வென்றதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பாராட்டுக்கள். கண்டிப்பாக அன்றைய நாளின் சிறந்த அணி வென்றது. இந்தியாவுக்கு கடினமான அதிர்ஷ்டம். ஆனால் தொடர் முழுவதும் அவர்கள் அபாரமாக விளையாடினார்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உலககோப்பையை ஆஸ்திரேலிய கேப்டனுக்கு வழங்கிய கையோடு இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்ற – பிரதமர் மோடி

இதற்கிடையே 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து வரும் அதே கதையை மீண்டும் அரங்கேற்றிய இந்தியாவை பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பையின் சோக்கர் என்றால் இந்தியா உலகக்கோப்பை நாக் அவுட்டின் போட்டிகளின் சோக்கர் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கலாய்க்கிறார்கள். அதற்கு செமி ஃபைனலுக்கு கூட வராத நீங்கள் பேச தகுதியற்றவர்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement