உலககோப்பையை ஆஸ்திரேலிய கேப்டனுக்கு வழங்கிய கையோடு இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்ற – பிரதமர் மோடி

Modi
Advertisement

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் 19-ஆம் தேதி நேற்று பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக ஐசிசி ஒருநாள் சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இருந்து 240 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக விராட் கோலி 54 ரன்களையும், கே.எல் ராகுல் 66 ரன்களையும் குவித்தனர். பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணியின் வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட காட்சிகளையும் நம்மால் காண முடிந்தது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, முஹமது சிராஜ் போன்ற வீரர்கள் மிகவும் வருத்தத்துடனும், சோகத்துடனும் மைதானத்தில் காணப்பட்டனர்.

- Advertisement -

ஒட்டுமொத்த இந்திய அணியுமே மைதானத்தில் சோகத்துடன் இருந்தது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் வீரர்களும் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கலங்கியவாறு இருந்தார்கள். இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண வந்த பிரதமர் மோடி தொடரின் சாம்பியன் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கிய பின்னர் இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்று இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உலககோப்பையை தவறவிட்டாலும் கேன் வில்லியம்சனின் பெரிய சாதனையை தகர்த்த – ஹிட்மேன் ரோஹித் சர்மா

அந்த வகையில் ஒவ்வொரு வீரரையும் தனித்தனியே சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்த மோடி எப்போதுமே இந்திய அணிக்கு நாங்கள் அனைவரும் ஆதரவாகவே இருப்போம் என்று கூறியவாறு வீரர்களை ஊக்குவித்து சென்றுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement