உலககோப்பையை தவறவிட்டாலும் கேன் வில்லியம்சனின் பெரிய சாதனையை தகர்த்த – ஹிட்மேன் ரோஹித் சர்மா

Rohit-and-Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்தது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இந்திய கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த போட்டியில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பத்து வீசுவதாக அறிவித்த பின்னர் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 43 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உலககோப்பை போட்டிகளில் கேன் வில்லியம்சனின் மாபெரும் சாதனை ஒன்றினை தகர்த்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த ரோஹித் சர்மா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 47 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தார். அவர் அடித்த இந்த 47 ரன்கள் மூலம் இந்த நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 இன்னிங்ஸ்களில் 597 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : பாவம்யா மனுஷன்.. சச்சினை மிஞ்சி உலக சாதனை.. மொத்தத்தை கொடுத்தும் கைக்கு கிடைக்காத கோப்பை

ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை அடித்த கேப்டன் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த கேன் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி தற்போது ரோகித் சர்மா அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா மட்டும் அரைசதம் கடந்து நிலைத்து விளையாடி இருந்தால் நிச்சயம் இந்திய அணி மிகப்பெரிய ரன்களை நோக்கி சென்றிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement