பாவம்யா மனுஷன்.. சச்சினை மிஞ்சி உலக சாதனை.. மொத்தத்தை கொடுத்தும் கைக்கு கிடைக்காத கோப்பை

Virat Kohli POT
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா 6வது முறையாக தட்டிச் சென்றது. மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய 11 வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது.

அதனால் இம்முறை 2011 போல கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக ஏற்பட்டது. ஆனால் மீண்டும் அழுத்தமான ஃபைனலில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது 100 கோடி ரசிகர்களின் நெஞ்சங்களை தூளாக்கியது.

- Advertisement -

பாவம் மனுஷன்:
இத்தொடரில் அனைத்து வீரர்களுமே அசத்திய நிலையில் ரோஹித் சர்மா 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தும் தோல்வியை சந்தித்ததால் கண்ணீர் விட்டது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. ஆனால் அவரையும் மிஞ்சி 765 ரன்கள் அடித்து ஒரு உலககோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து வெற்றிக்கு போராடியும் கோப்பையை தொட முடியாமல் விராட் கோலி சென்றது ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக அமைந்தது.

ஏனெனில் ஃபைனலில் முக்கியமான நேரத்தில் 54 ரன்கள் எடுத்த அவர் துரதிஷ்டவசமாக இன்சைட் எட்ஜ் வாங்கி போல்டானார். மேலும் இத்தொடரில் 11 போட்டிகளில் 85, 55*, 103*, 95, 88, 101*, 51, 117, 54 என 6 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 19 மணி நேரம் 56 நிமிடம் விளையாடி மொத்தம் 765 ரன்களை அவர் உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு தொடரில் உச்சகட்ட உலக சாதனை செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரராக முழுமூச்சுடன் முழு திறமையை வெளிப்படுத்தி தம்மால் முடிந்த மொத்தத்தையும் இந்தியாவுக்கு கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் அனைத்து வீரர்களும் ஒன்றாக அசத்தாத காரணத்தால் உலகக்க்கோப்பையை தொட முடியாமல் வேதனையுடன் சென்ற அவரின் திறமைக்கு தொடர்நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பைகளில் தொடர்நாயகன் விருதுகளை வென்ற அவர் ஐசிசி தொடர்களில் 3 நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரர் என்ற அவராலும் தொட முடியாத உலக சாதனையை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் தலைமையில் ஐசிசி வெளியிட்ட 2023 உ.கோ கனவு அணி.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்

ஏனெனில் அவரை தவிர்த்து இந்த உலகில் சச்சின் உட்பட வேறு எந்த வீரரும் 2 ஐசிசி தொடர் நாயகன் விருதுகளை கூட வென்றதில்லை. அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 21* விருதுகளை (157 தொடர்களில்) வென்றுள்ள விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனை தகர்த்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் 20 தொடர்நாயகன் விருதுகள் (183 தொடர்களில்) வென்றதே முந்தைய சாதனையாகும். இதையெல்லாம் பார்க்கும் போது பாவம்யா மனுஷன் என்று தான் ரசிகர்களுக்கு சொல்லத் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement