ரோஹித் தலைமையில் ஐசிசி வெளியிட்ட 2023 உ.கோ கனவு அணி.. 6 இந்திய வீரர்களுக்கு இடம்

CWC2023 Team
- Advertisement -

கோலாலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் சொந்த மண்ணில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து மிரட்டி வந்த இந்தியாவை மாபெரும் ஃபைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்து அசத்தியது.

மறுபுறம் 2013க்குப்பின் சந்தித்து வந்த தொடர் தோல்விகளை இப்போதாவது நிறுத்தமா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மீண்டும் முக்கிய நேரத்தில் அதே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. அதனால் இம்முறையாவது கோப்பையை வெல்வோம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 100 கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சங்கள் தூள் தூளாக உடைந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஐசிசி கனவு அணி:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்ட வீரர்களை வைத்து ஐசிசி தங்களுடைய கனவு 11 பேர் அணியை வெளியிட்டுள்ளது. அதில் நெஞ்சை உடைக்கும் தோல்வியை சந்தித்த இந்திய அணியிலிருந்து 5 வீரர்களிடம் பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள போதிலும் இதனால் என்ன பயன் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

முதலாவதாக இந்த அணியின் துவக்க வீரராக 10 போட்டிகளில் 594 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்காவின் குவிண்டன் டீ காக் கீப்பராகவும் இடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து கோப்பையை தவற விட்டாலும் இத்தொடரில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து ஓப்பனிங்கில் மிரட்டிய ரோஹித் சர்மா 2வது துவக்க வீரராகவும் 2023 உலகக் கோப்பை கனவு அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 3வது இடத்தில் சந்தேகமின்றி 765 ரன்கள் குவித்து சச்சினின் உலக சாதனையை உடைத்த விராட் கோலியும் 4வது இடத்தில் சவாலான இந்தியாவுக்கு எதிராக 2 சதங்கள் அடித்தது உட்பட மொத்தம் 552 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்தின் டார்ல் மிட்சேல் பிடித்து அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 5வது இடத்தில் இந்தியாவுக்காக மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடி 452 ரன்கள் சேர்த்த கேஎல் ராகுல் 6வது இடத்தில் தனி ஒருவனாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்றுக் கொடுத்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியா நல்லா ஆடுனாங்க.. மொத்த உழைப்பும் வீணா போச்சு.. ஐசிசிக்கு வாசிம் அக்ரம் முக்கிய கோரிக்கை

7வது இடத்தில் இந்தியாவின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 8வது இடத்தில் 21 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய இலங்கையின் தில்சன் மதுசங்கா ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள். அதே போல முதன்மை ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா இடம் பிடித்து அசத்தியுள்ள நிலையில் இந்தியாவின் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர்.

Advertisement