இந்தியா நல்லா ஆடுனாங்க.. மொத்த உழைப்பும் வீணா போச்சு.. ஐசிசிக்கு வாசிம் அக்ரம் முக்கிய கோரிக்கை

Wasim Akram 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய 6வது உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. மறுபுறம் கடைசியாக கடந்த 2013ஆம் ஐசிசி கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் 10 வருடங்களாக தோல்விகளை சந்தித்து வந்தது.

அதனால் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் கில்லியாக செயல்படக்கூடிய இந்தியா நிச்சயம் இம்முறை 2011 போல கோபியை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையை வைத்திருந்தனர். அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையை வென்று ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்து அபாரமாக செயல்பட்டனர்.

- Advertisement -

வாசிம் அக்ரம் கோரிக்கை:
அந்த புத்துணர்ச்சியுடன் 2023 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் மிரட்டிய இந்தியா ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது உட்பட 9 லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது. அத்துடன் ரோஹித் முதல் பெஞ்சில் அமர்ந்து திடீரென்று வாய்ப்புப் பெற்ற ஷமி உட்பட அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் அபார செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்.

அதன் காரணமாக 2019 உட்பட எப்போதுமே ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வரும் நியூசிலாந்தை செமி ஃபைனலில் இந்தியா தோற்கடித்தது ரசிகர்களின் நம்பிக்கையை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆனால் மீண்டும் அதே பழைய பஞ்சாங்கம் போல ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பந்து வீச்சிலும் சுமாராகவே விளையாடி கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

இந்நிலையில் உலகக் கோப்பையின் நாக் அவுட் செமி ஃபைனல் வடிவமாக அல்லாமல் பிளே ஆஃப் வடிவமாக மாற்ற வேண்டும் என்று ஐசிசிக்கு வாசிம் அக்ரம் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போது அனைத்து வகையான லீக் தொடர்களிலும் பிளே ஆப் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் கடினமாக உழைத்து வருகிறீர்கள். அங்கே ஒரு மோசமான நாள் காரணமாக நீங்கள் இறுதியில் தோற்கக் கூடாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: நீங்க விதைச்ச விதை உங்களையே அறுத்துடுச்சு.. இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை விமர்சித்த பிரட் லீ

அதாவது ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டதற்கு சன்மானமாக குவாலிபயர் 1 போட்டியில் தோற்றால் மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடி செல்வதற்கான வாய்ப்பை மீண்டும் பெறுவார்கள். அப்படி பிளே ஆஃப் ஃபார்மட் இத்தொடரில் இருந்தால் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு 2 வாய்ப்புகள் கிடைத்திருக்கும். எனவே வருங்காலங்களில் உலகக் கோப்பைகளிலும் செமி ஃபைனலுக்கு பதிலாக பிளே ஆஃப் சுற்று கொண்டு வர வேண்டுமென வாசிம் அக்ரம் கேட்டுக் கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement