நீங்க விதைச்ச விதை உங்களையே அறுத்துடுச்சு.. இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை விமர்சித்த பிரட் லீ

Brett Lee
- Advertisement -

நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிக் செய்த இந்தியா சுமாராக விளையாடி 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே பாதி வெற்றியை கோட்டை விட்டது.

மீதி வெற்றியை சேசிங் செய்யும் போது டிராபிஸ் ஹெட் 137, லபுஸ்ஷேன் 58* ரன்கள் அடித்து எளிதாக பறித்தார்கள். அந்த வகையில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்று உச்சகட்ட ஃபார்மில் இருந்ததால் 2011 போல கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மீண்டும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்தது.

- Advertisement -

அறுத்த வினை:
இந்நிலையில் அகமதாபாத் பிட்ச்சை சுழலுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தயாரிக்குமாறு மைதான நிர்வாகத்திடம் இந்திய அணியினர் கேட்டுக் கொண்டதே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக பிரட் லீக் கூறியுள்ளார். ஒருவேளை பிட்ச் பவுன்ஸ் மற்றும் வேகத்துக்கு சாதகமாக இருந்திருந்தால் ஷமி, சிராஜ், பும்ரா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கும் இந்திய அணி நிச்சயம் இப்போட்டியில் வென்றிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தேவையற்ற வினையை விதைத்த இந்தியா அதை அறுவடை செய்ததாக மறைமுகமாக விமர்சிக்கும் அவர் இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக நீங்கள் அகமதாபாத் பிட்சை பார்க்கும் போது கந்தலாகவும் சுழலுக்கு சாதகமாகவும் இருந்தது. அதனால் பணி இருக்கும் போது ஈரப்பதம் இருக்கும் என்பதால் சேசிங் செய்வது எளிதாக இருந்தது”

- Advertisement -

“அதை அப்படி பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நீங்கள் இந்திய அட்டாக்கை பார்க்கும் போது ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் நெருப்பாக செயல்பட்டார்கள். எனவே அவர்கள் வேகத்துக்கு சாதகமான ஃபிளாட்டான பிட்ச்சை உருவாக்கியிருந்தால் இதே 240 ரன்கள் வைத்து வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் மெதுவான பிட்ச்சை உருவாக்கியிருந்தார்கள். அது அவர்களுக்கு உதவவில்லை.

இதையும் படிங்க: நீங்க விதைச்ச விதை உங்களையே அறுத்துடுச்சு.. இந்தியாவின் தோல்விக்கான காரணத்தை விமர்சித்த பிரட் லீ

“இந்த உலகக் கோப்பையில் புள்ளி விவரங்கள் அடிப்படையில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா கண்டிப்பாக கோப்பையை வென்றிருக்க வேண்டும். குறிப்பாக தற்போதுள்ள ஃபார்முக்கு பேப்பரில் இருக்கும் வீரர்களின் பெயர்களுக்கு அவர்கள் ஃபைனலில் வென்றிருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியர்களின் எப்போதும் விடக்கூடாது என்ற மனநிலை பெரிய தொடர்களில் இன்னும் அவர்களுக்கு வெற்றியை கொடுத்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement