தொடர்நாயகன் விருதினை வென்ற பின்னர் விராட் கோலி செய்ததை பாத்தீங்களா? – மனதை உருக்கிய காட்சி

Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரில் மொத்தம் 11 போட்டியில் பங்கேற்று விளையாடிய விராட் கோலி 6 அரைசதங்கள் சதங்கள் மற்றும் 3 சதங்கள் என 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.

நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி 63 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகளுடன் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய விராட் கோலி தொடர் நாயகன் விருதினை வெல்வார் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம் தான். ஆனாலும் கோப்பையை கைப்பற்றாத வருத்தம் அவரிடம் இருந்ததை நேற்று கண்கூடாக பார்க்க முடிந்தது.

அந்த வகையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் கொந்தளித்த வேளையில் இந்திய அணியின் வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்ட பல காட்சிகளை நம்மால் காண முடிந்தது.

- Advertisement -

அதோடு இந்த உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய விருதான தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் செய்த சில செயல்கள் ரசிகர்களை வருத்தம் அடைய செய்தது மற்றுமின்றி உருக வைத்தது என்றே கூறலாம். ஏனெனில் இது போன்ற உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் என்கிற மிகப்பெரிய விருது அவருக்கு வழங்கப்பட்ட போதிலும் அந்த விருதினை பெறும்போது விராட் கோலி முகத்தில் சிறிதளவு புன்னகையை வெளிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க : எல்லாம் செஞ்ச நீங்க அந்த தப்பை செஞ்சுருக்கக் கூடாது.. ரோஹித்தின் முக்கிய தவறை சுட்டிக் காட்டிய சேவாக்

ஏனெனில் உலககோப்பையை கைப்பற்ற முடியாத மன வருத்தத்தில் இருந்த அவர் மிகுந்த சோகத்துடனும், கனத்த இதயத்துடன் அந்த விருதினை பெற்றுக்கொண்டு ரவி சாஸ்திரியிடம் பேசாமல் கூட வருத்தத்துடனே அங்கிருந்து நகர்ந்து வந்தார். அவரது இந்த சோகமான காட்சி ரசிகர்களையும் வருத்தம் அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement