ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவின் சவாலை தோற்கடித்து ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா பரம எதிரி பாகிஸ்தானை தொடர்ந்து 8வது முறையாக தோற்கடித்து தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.
அதே வேகத்தில் வங்கதேசத்தை எளிதாக வீசிய இந்தியா ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் 2011 போல இம்முறை உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த பயணத்தில் அடுத்ததாக வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தங்களுடைய 6வது போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது.
வாசிம் அக்ரம் கருத்து:
ஆனால் அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா குணமடைந்து வந்தால் முகமது ஷமி நீக்கப்படுவதற்கான சூழல் காணப்படுகிறது. இருப்பினும் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும் வலுவான நியூசிலாந்தை தோற்கடிப்பதற்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய ஷமி உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதால் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கம்பீர், ரெய்னா போன்ற சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாக் அவுட் போட்டிகள் காத்திருப்பதால் முழுமையாக 100% பாண்டியா குணமடையாமல் ரிஸ்க் எடுத்து அணிக்குள் கொண்டு வர வேண்டாம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். எனவே ஷமி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போதைய அணி ஹர்திக் பாண்டியா இல்லாமலேயே வலுவாக காணப்படுகிறது”
“ஒருவேளை அவர் ஃபிட்டானால் நல்லது. ஆனால் ஷமியை நீக்குவது மிகவும் கடினமான முடிவாக இருக்கும். இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாண்டியா விஷயத்தில் இந்தியா ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் தசைப்பிடிப்பு காயத்தை பொறுத்த வரை ஆரம்பத்தில் நீங்கள் நன்றாக உணர்ந்தாலும் போட்டியின் போது மீண்டும் காயத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே அவரை 100% ஃபிட்டான பின் விளையாட வையுங்கள்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.. செமி ஃபைனல் செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்
“அத்துடன் எந்த வீரர் அணிக்குள் வந்தாலும் சிறப்பாக செயல்படும் அளவுக்கு தயாராக வைத்திருப்பதற்கான பாராட்டுக்கள் இந்திய அணி நிர்வாகத்திற்கு சேர வேண்டும். ஷமி பந்தை தரையில் அடுத்த பின் அது புறங்களிலும் சென்றது. அதனாலேயே அவர் அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்று நினைக்கிறேன்” என கூறினார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி இங்கிலாந்தை லக்னோ நகரில் இந்தியா எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.