பாகிஸ்தான் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.. செமி ஃபைனல் செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்

Pakistan CWC23
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3 தோல்விகளையும் 2 வெற்றிகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக விளையாடும் அந்த அணி ஆரம்பத்திலேயே நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்து நல்ல துவக்கத்தை பெற்றது.

ஆனால் அதன் பின் இந்தியாவுக்கு எதிரான 3வது போட்டியில் 191 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை சந்தித்து விமர்சனத்திற்குள்ளானது. அதிலிருந்து கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு 10 ரன்னில் கொடுத்த கேட்ச்சை தவற விட்டதால் ஆஸ்திரேலியாவுக்காக 163 ரன்கள் அடித்து நொறுக்கிய டேவிட் வார்னர் 2வது தோல்வியை பரிசளித்தார்.

- Advertisement -

செமி ஃபைனல் வாய்ப்பு:
அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி சென்னையில் நடைபெற்ற 5வது போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் சுமாராக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த அந்த அணி மிகப்பெரிய அவமானத்திற்குள்ளாகி ஏராளமான கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் 3 அடுத்தடுத்த தோல்விகளால் பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தான் 23வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் -0.400 என்ற மோசமான ரன்ரேட்டுடன் 5வது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் செமி ஃபைனல் செல்வதற்கு தங்களுடைய எஞ்சிய 4 போட்டிகளில் 1 தோல்வியை கூட சந்திக்காமல் தொடர்ந்து வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

- Advertisement -

அது மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் மோசமான ரன் ரேட்டை நல்ல நிலைமையில் மாற்றுவதற்கு அந்த 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் பெரிய வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனெனில் 2019 உலகக் கோப்பையில் தலா 11 புள்ளிகள் பெற்றிருந்தும் கூடுதல் ரன் ரேட் காரணமாக பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து கடைசி நேரத்தில் 4வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

இதையும் படிங்க: கில்கிறிஸ்டின் ஆல் டைம் சாதனையை உடைத்த டீ காக்.. வங்கதேசத்தை பந்தாடி புதிய இரட்டை உலக சாதனை

ஆனால் இதில் மிகப்பெரிய சவால் என்னவெனில் பாகிஸ்தானின் அடுத்த 4 போட்டிகள் முறையே தென்னாபிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ளது. இதில் 3 எதிரணிகள் வலுவான டாப் அணிகளாக இருப்பதால் அதில் ஒரு தோல்வியை பதிவு செய்தால் கூட பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவதற்கே தற்சமயத்தில் 90% வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement