விராட், ரோஹித் இல்லாம உங்களால அதை சாதிக்க முடியாது.. பிசிசிஐ மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

Wasim Akram 6
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் தோல்வியை சந்தித்த அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. வரும் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணத்தின் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் அணியுடன் தலைமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

வாசிம் அக்ரம் பதிலடி:
அதனால் காலம் கடந்த அந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 உலகக் கோப்பைக்கு முன் புதிய டி20 அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதன் காரணமாக 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் இதுவரை ரோகித் சர்மா மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை.

அதை விட அந்த சீனியர் வீரர்களில் ஒருவராக 35 வயதை கடந்து விட்ட காரணத்தால் விராட் கோலியும் கேப்டன் ரோகித் சர்மாவை போலவே கழற்றி விடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகின. மொத்தத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் டி20 கேரியர் தற்சமயத்தில் கேள்விக்குறியாக இருப்பதால் அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முதுகெலும்பு வீரர்களாக திகழும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்யலாமா என்ற சந்தேகம் கூட பிசிசிஐக்கு வருவதற்கு அவசியம் இல்லை என வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒட்டுமொத்தமாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து உங்களால் டி20 உலகக் கோப்பையை வென்று விட முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இப்படி சொல்றதுக்கு சாரி.. இன்றைய இந்திய வீரர்களால் அதை சாதிக்க முடியல.. கபில் தேவ் அதிருப்தி

“டி20 உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. எனவே நான் அந்த இருவரையுமே தேர்வு செய்வேன். அவர்கள் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் எனவே உங்களுக்கு அவர்களை தேர்வு செய்வது பற்றி எந்தவிதமான சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு சற்று அனுபவமும் அவசியமாகும். ஏனெனில் ஒட்டுமொத்தமாக நீங்கள் இளம் வீரர்களை மட்டும் வெற்றிக்காக சார்ந்திருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement