இப்படி சொல்றதுக்கு சாரி.. இன்றைய இந்திய வீரர்களால் அதை சாதிக்க முடியல.. கபில் தேவ் அதிருப்தி

Kapil Dev 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா கடைசியில் அபாரமாக விளையாடி மாபெரும் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து 6வது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளையும் லீக் சுற்றில் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்றது.

ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடிய 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் கடந்த 10 வருடமாக சந்தித்து வரும் தோல்விகளில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்பதை மீண்டும் காண்பித்த இந்தியா சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை தவற விட்டது.

- Advertisement -

கபில் தேவ் அதிருப்தி:
குறிப்பாக அனைத்து பேட்ஸ்மேன்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் மாபெரும் ஃபைனலில் கடைசி 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல 241 ரன்களை கட்டுப்படுத்தும் போது 11 – 40 வரையிலான மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்காததும் தோல்விக்கு முக்கிய காரணமானது.

இந்நிலையில் தற்போது நவீனமான பயிற்சிகள் வசதிகள் கிடைத்தும் தற்போதுள்ள வீரர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஏமாற்றத்தை கொடுப்பதாக ஜாம்பவான் கபில் தேவ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். இப்போதைய கிரிக்கெட்டர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை”

- Advertisement -

“ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். உங்கள் மனதில் வெற்றி மட்டுமே அனைத்தும் என்றிருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் விளையாடும் விதம் முக்கியம். ஏனெனில் மற்ற அணிகளும் இங்கே விளையாடுவதற்காக வருகிறார்கள். குறிப்பாக ஃபைனலில் அவர்கள் நம்மை விட சிறப்பாக விளையாடினார்கள். அதை நாம் மதிக்க வேண்டும்”

இதையும் படிங்க: தோனி, பாண்டியாவுக்கு அடுத்து ரிங்கு தான் ஃபினிஷரா வந்துருக்காரு.. முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

“இந்திய அணியினர் சிறப்பாக விளையாடியும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாததை பார்ப்பது எனக்கு மனதளவில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால் அது முக்கியமல்ல. இம்முறை எதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் விளையாடினோம். அதை வைத்து அடுத்த முறை எவ்வாறு வெற்றி பெறலாம் என்பதை கற்றுக் கொள்வது முக்கியம். அதையே நாம் பின்பற்றுவோம்” என்று கூறினார்.

Advertisement