தோனி, பாண்டியாவுக்கு அடுத்து ரிங்கு தான் ஃபினிஷரா வந்துருக்காரு.. முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

Rinku Singh 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று வழக்கமான அசத்தலை வெளிப்படுத்தியுள்ளது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஜோஸ் இங்லீஷ் 110 ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு சூரியகுமார் யாதவ் 80, இஷான் கிசான் 58 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்த போதிலும் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

தோனி, பாண்டியா வரிசையில்:
குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவுக்கு கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது 22* ரன்களில் இருந்த ரிங்கு சிங் அட்டகாசமான சிக்சரை அடித்து சிறப்பான ஃபினிஷிங் செய்து கொடுத்தார். முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த ரிங்கு சிங் இந்தியாவுக்காக அறிமுகமாகி அயர்லாந்துக்கு எதிராக முதல் முறையாக பேட்டிங் செய்த போட்டியிலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதே போல சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய போட்டிகளில் நேபாளுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் கடைசி நேரத்தில் அட்டகாசமாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இப்போட்டியிலும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வகையில் இதுவரை தமக்கு கிடைத்த இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டிய 3 சூழ்நிலைகளிலும் ரிங்கு அசத்தியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மேலும் தோனி, பாண்டியாவுக்கு பின் நவீன கிரிக்கெட்டில் ரிங்கு சிங் இந்தியாவின் அடுத்த ஃபினிஷராக உருவெடுத்துள்ளதாகவும் பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது இந்தியாவுக்காக அவர் வெற்றியை பெற்றுக் கொடுப்பது 3வது முறையாகும். குறிப்பாக 3வது முறையாக ஏதோ ஸ்பெஷல் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவான போது அவர் அதில் அசத்தியுள்ளார். இத்தனைக்கும் 5 முதல் 7 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் நீண்ட காலம் விளையாடியவரை போல் அவரிடம் திறமையும் முதிர்ச்சியும் இருக்கிறது”

இதையும் படிங்க: அந்த ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்.. ஹெய்டன் கருத்தை வைத்து சூர்யகுமாரை கலாய்த்த சோயப் அக்தர்

“அவர் தற்போது ஃபினிஷிங் கலையை சிறப்பாக செய்து வருகிறார். தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மட்டுமே செய்து வந்த அந்த வேலையை மற்றவர்கள் செய்வது எளிதானதல்ல. ஆனால் அவர்களுக்குப் பின் இந்தியாவுக்கான ஃபினிஷர் வேலையை செய்வதற்கு வேறு யாரும் வரவில்லை. தற்போது ரிங்கு அந்த வேலையில் அமைதியாக பதறாமல் முக்கிய நேரத்தில் அசத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement