அந்த ஒரு வார்த்தை சொல்லுங்க போதும்.. ஹெய்டன் கருத்தை வைத்து சூர்யகுமாரை கலாய்த்த சோயப் அக்தர்

Shoaib Akhtar 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 5 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த வெற்றியால் என்ன பயன் என்று இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் அலுப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஏனெனில் கடந்த வாரம் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பு விட்டது. அந்த தோல்விக்கு கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்பின்றி ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமானது.

- Advertisement -

கலாய்த்த அக்தர்:
அதை விட கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் திண்டாட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமானது. சொல்லப்போனால் தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் ஆரம்பம் முதலே டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்களால் அடித்து நொறுக்கி வருகிறார்.

அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று போற்றப்படும் அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி 2022ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி டி20 வீரர் என்ற விருதையும் வென்றார். ஆனால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் அப்படியே நேர்மாறாக திண்டாடி வரும் அவர் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் உலகக்கோப்பை ஃபைனலில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக இருந்த அவர் இத்தொடரின் முதல் போட்டியில் அதற்கு நேர்மாறாக 209 ரன்களை சேசிங் செய்கையில் 80 ரன்கள் அடித்து நொறுக்கி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் முதல் போட்டியில் வர்ணையாளராக செயல்பட்ட மேத்யூ ஹெய்டன் – ரவி சாஸ்திரி ஆகியோர் சூரியகுமார் யாதவை எப்படி டி20 கிரிக்கெட்டில் தடுத்து நிறுத்தலாம் என்று நேரலையில் பேசியதை சோயப் அக்தர் ட்விட்டரில் பதிவிட்டு கலாய்த்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: முதல் டி20யில் ஃபினிஷிங் செய்ய.. தோனி கொடுத்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. ரிங்கு சிங் ஓப்பன்டாக்

“சூரியகுமாராக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் போது எப்படி உங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று ரவி சாஸ்திரி கேட்டார். அதற்கு சூரியகுமாரிடம் இது ஒருநாள் போட்டி என்று சொல்லுங்கள் போதும் என ஹெய்டன் சொன்னது வேடிக்கையானது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது சூரியகுமார் ஒன்டே மேட்ச் என்ற வார்த்தையை கேட்டாலே ஓடிப் போய் விடுவார் என்ற வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சொதப்புவதாக அக்தர் கலாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement