விராட், ரோஹித், பும்ரா, குல்தீப்பை விட அவர் தான் 2023 உ.கோ தொடரில் இந்தியாவின் கேம் சேஞ்சரா இருப்பாரு.. வாசிம் அக்ரம் கணிப்பு

Wasim Akram 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அந்த நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா 8வது முறையாக கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. அதை விட அந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு நல்ல ஃபார்முக்கு வந்துள்ளனர்.

- Advertisement -

அக்ரம் கணிப்பு:
அதே போல குல்தீப் யாதவ் சுழலில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். மேலும் பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய காயத்தை சந்தித்த வீரர்கள் முழுமையாக குணமடைந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றினர். அத்துடன் சிராஜ், கில், இஷான் கிசான் போன்ற பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியதை போலவே உலக கோப்பையிலும் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட வீரர்களை விட சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் வெற்றியை மாற்றும் இந்திய வீரராக இருப்பார் என்று முன்னாள் ஜாம்பவான் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கணித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்து நடைபெறும் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் வெற்றிகளை மாற்றுபவராக இருப்பார்”

- Advertisement -

“அவரை போன்ற வீரர்களால் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் முதன்மையானதாக இந்தியா இருக்கும். மேலும் இளம் வீரர்கள் சொந்த மண்ணில் விளையாடுவதால் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. அதே போல அவர்களின் பவுலர்கள் என்ன செய்வார்கள் என்பதை இத்தொடரில் நாம் பார்த்தோம். குறிப்பாக ஆசிய கோப்பையில் பெரிய அணிகளுக்கு எதிராக குல்தீப் நிறைய விக்கெட்டுகளை எடுத்தார்”

இதையும் படிங்க: வாய்ப்புக்காக ஏங்கி ஏங்கி பழகிடுச்சு.. ஆஸி தொடரில் கூட இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சாம்சன் போட்ட பதிவால் – ரசிகர்கள் சோகம்

“எனவே இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனால் இந்திய அணியை ஆதரிப்பவர்களுக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக நல்ல அணி கிடைத்துள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 66/4 என சரிந்த இந்தியாவை 87 ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றிய பாண்டியா மொத்தமாக 6 விக்கெட்களை எடுத்தார். எனவே பேட்டிங், பவுலிங் துறைகளில் அசத்தும் இந்தியாவின் முக்கிய வீரராக அவர் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement