வாய்ப்புக்காக ஏங்கி ஏங்கி பழகிடுச்சு.. ஆஸி தொடரில் கூட இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சாம்சன் போட்ட பதிவால் – ரசிகர்கள் சோகம்

Sanju Samson 2
Advertisement

பரபரப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக உலகக் கோப்பைக்கு இறுதிக்கட்டமாக தயாராகும் வகையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாக அமைந்தது. ஆனால் அந்த தொடரில் கூட கேரளாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தம்முடைய 2வது போட்டியை 4 வருடங்கள் கழித்து 2019இல் விளையாடிய அவலத்தை சந்தித்தார்.

- Advertisement -

வேதனை பதிவு:
மேலும் 2021 வரை 6 மாதத்திற்கு ஒருமுறை 3 மாதத்திற்கு ஒருமுறை என அவரை குப்பையை போல் பயன்படுத்திய தேர்வுக்குழு சுமாராக செயல்பட்ட ரிசப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோருக்கு ராஜா வீட்டுப் பிள்ளையை போல் தொடர்பு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடி வந்த அவர் கடந்த 2022இல் பெற்ற வாய்ப்புகளில் முதல் முறையாக அரை சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்று தொடர்வாய்ப்புகளை கொடுத்தால் அசத்துவேன் என்பதை நிரூபித்தார்.

அந்த நிலையில் பண்ட், ராகுல் ஆகியோர் காயத்தை சந்தித்ததால் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மீண்டும் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறவில்லை. அத்துடன் “உலக கோப்பையில் என்ன சாக்கு கிடைக்கும் கழற்றி விடலாம்” என்று காத்திருந்த தேர்வுக்குழு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அரை சதமடித்து சிறப்பாக செயல்பட்டும் டி20 தொடரில் சுமாராக செயல்பட்டதால் அவரை ஆசிய கோப்பையில் அதிரடியாக நீக்கியது.

- Advertisement -

இருப்பினும் அவரை விட ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமாக செயல்பட்ட சூரியகுமார் யாதவிற்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக திலக் வர்மாவுக்கும் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அத்தொடரில் அவ்விருவருமே எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலைமையில் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தேர்வாகியுள்ளனர்.

Sanju Samson FB

அதனால் உலகக்கோப்பையில் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை சரி இந்த ஆஸ்திரேலியா தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த சஞ்சு சாம்சன் ஏமாற்றமடைந்து தற்போது பேஸ்புக் பக்கத்தில் சிரித்த முகத்தை பிரதிபலிக்கும் ஒரே ஒரு ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் அதன் பின் ஏராளமான வேதனையும் வலியும் வார்த்தைகளும் இருந்தும் எதாவது பேசினால் அரைகுறை வாய்ப்புகளும் கிடைக்காமல் போய்விடும் என்ற அர்த்தத்தில் நீங்கள் இப்படி பதிவிட்டுள்ளதை புரிந்து கொள்ள முடிவதாக சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement