உலகின் நம்பர் 1 பவுலருக்கே இப்படி ஒரு நிலையா? – முன்னாள் வீரர் சொன்ன உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி

Shaheen-Afridi
- Advertisement -

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியன் இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாத நிலையில் 2 முறை கோப்பைகளை வென்ற பாகிஸ்தான் ஃபைனல் வரை சென்று இலங்கையிடம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பைனலில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் பாபர் அசாம் போன்ற முக்கிய வீரர்கள் முக்கிய நேரத்தில் வெளிப்படுத்திய சொதப்பலான ஆட்டம் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதைவிட நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முழங்கால் காயத்தால் இந்த தொடரில் வெளியேறியது ஆரம்பம் முதலே பின்னடைவை ஏற்படுத்தி வந்தது.

shaheen afridi

- Advertisement -

ஏனெனில் கடந்த 2018இல் அறிமுகமாகி மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்திலேயே 3 வகையான பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த இவர் கடந்த வருடம் அற்புதமாக செயல்பட்டு 2021ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருதை வென்றார். அதைவிட 1992 முதல் தொடர்ச்சியாக பரம எதிரியான இந்தியாவிடம் உலக கோப்பையில் தோற்று வந்த மோசமான கதைக்கு கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அற்புதமாக பந்துவீசி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி முற்றுப்புள்ளி வைத்த அவர் ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

அக்கறையில்லாத பாக்:
அந்த வகையில் தற்போதைய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு துறையில் முதுகெலும்பாக கருதப்படும் அவர் காயத்தால் பங்கேற்கவில்லை என்றாலும் இந்த ஆசிய கோப்பையில் தங்களுடன் பயணித்து இதர பவுலர்களுக்கு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் வாரியத்திடம் சிறப்பு கோரிக்கை வைத்து அழைத்து வந்திருந்தார். அவரை விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் நலம் விசாரித்த நிலையில் தற்போது காயத்திலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்துள்ள அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Afridi

ஆனால் இந்த காயத்திலிருந்து குணமடைய இங்கிலாந்துக்குச் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது முதல் அங்கு பயணித்த விமான டிக்கெட், உட்கொண்ட உணவு வரை எதற்குமே பாகிஸ்தான் வாரியம் ஷாஹீன் அப்ரிடிக்கு உதவி செய்யவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்தார். காயத்திலிருந்து குணமடைய பற்றாக்குறையாக பாகிஸ்தான் வாரியம் செய்த உதவிகளை தாண்டி முக்கால்வாசி செலவுகளுக்கு தனது சொந்தப் பணத்தை ஷாஹீன் அப்படி பயன்படுத்தியதாக தெரிவித்த அவர் இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷாஹீன் பற்றி நான் பேச வேண்டுமானால் அவர் இங்கிலாந்துக்கு தன்னுடைய சொந்தப் பணத்தில் சென்றார். அவர் தன்னுடைய சொந்தப் பணத்தில் டிக்கெட் எடுத்து சொந்தப் பணத்தில் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரை கவனிப்பதற்காக நான் ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த டாக்டர் அவரை தொடர்பு கொண்டு தேவையான சிகிச்சைகளை அளித்தார். பாகிஸ்தான் வாரியம் எதையும் செய்யவில்லை, அவர் தான் அனைத்தையும் தமக்கு செய்து கொண்டார்.

மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது முதல் ஹோட்டல் அறை மற்றும் சாப்பாட்டுச் செலவுகள் வரை அனைத்தையும் அவர் தன்னுடைய சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்தினார். எனக்கு தெரிந்தவரை ஜஹீர் கான் (வாரிய இயக்குனர்) அவரிடம் ஓரிரு முறை மட்டுமே பேசினார், அவ்வளவுதான்” என்று கூறினார்.

- Advertisement -

wasimakram

இதை அறிந்த பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நாட்டுக்காக விளையாடி காயமடைந்த முதன்மை வீரருக்கு செலவு செய்யாமல் அக்கறையின்றி நடந்து கொண்ட பாகிஸ்தான் வாரியத்தை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த செய்தி தமக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம். புதிய முடிவினை எடுத்து அதிரடி – ரசிகர்கள் வரவேற்பு

“இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் எங்களுடைய டாப் முக்கிய வீரர். எனவே இந்த வீரரை நாம் அக்கறையுடன் பார்க்கவில்லையெனில் இழப்பு நமக்குத்தான். காயமடைந்ததும் அவரை பாகிஸ்தான் வாரியம் நேரடியாக உலகின் சிறந்த மருத்துவரிடம் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் அவர் தனியாளாக செய்கிறார் என்பதைக் கேள்விப்படும் போது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement