மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம். புதிய முடிவினை எடுத்து அதிரடி – ரசிகர்கள் வரவேற்பு

Mumbai Indians MI
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ஏற்கனவே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 6வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பலாக செயல்பட்டதால் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்த அந்த அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தைச் சந்தித்தது. இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதை போல் சந்தித்த இந்த வரலாற்று தோல்வியிலிருந்து மீண்டெழுந்து அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு தேவையான வேலைகளில் தற்போதே மும்பை அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அதில் ஒரு பாகமாக திலக் வர்மா, தேவால்ட் ப்ரேவிஸ் போன்ற தங்களுடைய இளம் வீரர்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்று உள்ளூர் அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் அந்த அணி நிர்வாகம் விளையாட வைத்தது. அந்த நிலைமையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடர்களில் தங்களது கிளைகளை வாங்கியுள்ள மும்பை நிர்வாகம் அதற்கு “எம்ஐ கேப் டவுன்” மற்றும் “எம்ஐ எமிரேட்ஸ்” என்று பெயரிட்டுள்ளது. அத்துடன் அந்த அணிகளுக்காக விளையாட வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை சேர்ந்த தரமான வீரர்களை வாங்கிய அந்த அணி நிர்வாகம் அவர்களுடைய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

புதிய பயிற்சியாளர்:
அந்த வகையில் தற்போது இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அமீரகம் ஆகிய 3 நாடுகளில் தங்களது அணி கால் பதித்துள்ளதால் அதை நிர்வகிக்க உலகிலேயே முதல் முறையாக “மும்பை நிர்வாக உலக செயல்பாடுகளின் தலைவர்” என்ற புதிய பதவியை நேற்று அறிவித்த மும்பை அணி நிர்வாகம் அதில் இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனேவை அமர்த்தியுள்ளது. அத்துடன் “மும்பை நிர்வாக உலக செயல்பாடுகளின் தலைவர்” என்ற பதவியில் இந்திய ஜாம்பவான் ஜஹீர் கான் செயல்படுவார் என்றும் அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவர்கள் ஏற்கனவே சமீப காலங்களாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பதவியை ராஜினாமா செய்து இந்த புதிய பதவிகளில் செயல்பட உள்ளனர்.

அதனால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் காலியாகியுள்ள தலைமை பயிற்சியாளர் பதவியில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மார்க் பவுச்சர் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்சமயத்தில் தென் ஆப்பிரிக்க தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையுடன் அந்த பதவியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

- Advertisement -

கோச் பவுச்சர்:
அந்த அறிவிப்பின் படி உலக கோப்பைக்கு பின் பதவி விலகும் மார்க் பவுச்சர் வரும் 2023 சீசன் முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்த நியமனம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்ஐ அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை பெருமையுடன் கவுரவமாக கருதுகிறேன். அவர்களுடைய வரலாறு மற்றும் சாதனைகள் உலக அளவிலான விளையாட்டில் அவர்களை மிகச் சிறந்த அணியாக காட்சிப் படுத்துவதைப் தெளிவாக காட்டுகிறது”

“இந்த பணியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நான் நல்ல முடிவுகளை எதிர்பார்த்துள்ளேன். இந்த அணி சிறந்த தலைவர் மற்றும் வீரர்களைக் கொண்ட வலுவான அணியாகும். அப்படிப்பட்ட அணியை நானும் வலுப்படுத்த போவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

வரலாற்றில் சச்சின் முதல் ஜெயவர்தனே வரை ஜாம்பவான்களை பயிற்சியாளராக நியமித்து 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள மும்பை தற்போது மற்றொரு ஜாம்பவானான மார்க் பவுச்சரை அடுத்த பயிற்சியாளராக நியமித்துள்ளதற்கு மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவிக்கின்றார்கள்.

இதையும் படிங்க : 2 முக்கிய தலைகள் இல்லாமல் டி20 உலகக்கோப்பையில் விளையாடயிருக்கும் பங்களாதேஷ் – பாவம் அவங்க

மேலும் திறமையும் தரமும் கொண்ட ரோகித் சர்மா – மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் முறையாக இணைந்து பணியாற்றுவதால் இந்த வருடம் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த மும்பை அடுத்த வருடம் எழுச்சி கண்டு 6வது கோப்பையை வெல்லும் எனவும் மும்பை ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement