2 முக்கிய தலைகள் இல்லாமல் டி20 உலகக்கோப்பையில் விளையாடயிருக்கும் பங்களாதேஷ் – பாவம் அவங்க

Ban
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 16-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 13-ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தினை அளிக்க காத்திருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி கெடு விதித்ததால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுமே தங்களது அதிகாரபூர்வ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டன.

Ban Team

- Advertisement -

அந்த வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகமும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அவர்களது அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பைத் தொடரின் போது அந்த அணியை தலைமை தாங்கி வழிநடத்திய கேப்டன் முஹமுதுல்லாவை கழற்றி விட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏமாற்றத்தை அளித்துள்ளது. வங்கதேச அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக நட்சத்திர வீரராக விளையாடி வந்த அவரை அந்நாட்டு நிர்வாகம் இப்படி கழட்டி விட்டுள்ளது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mahmudullah

36 வயதான முகமதுல்லா 2007 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக அறிமுகமாகி இதுவரை 50 டெஸ்ட் போட்டிகள், 212 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 121 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர். அதுமட்டும் இன்றி பேட்டிங் ஆல் ரவுண்டான அவர் பினிஷராக களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டும் இன்றி பவுலிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்.

- Advertisement -

இப்படி ஒரு சிறப்பான வீரரை அந்த அணி ஃபார்ம் அவுட் காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கி உள்ளது. அதேபோன்று அந்த அணிக்கு மற்றொரு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுவது யாதெனில் வங்கதேச அணியை சேர்ந்த அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹீம் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க : ஏமாற்றப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கி சாயம் பூசிய பிசிசிஐ – கலாய்க்கும் ரசிகர்கள், முழுவிவரம்

இதனால் அவரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது. இப்படி இருபெரும் தலைகள் இல்லாமல் வங்கதேச அணி இந்த தொடரை எவ்வாறு சமாளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement