இந்தியாவை குறை சொல்லி எஸ்கேப் ஆகாதீங்க.. குல்தீபை அட்டாக் பண்ண ப்ளானை சொல்லுங்க.. ஆர்தரை விளாசிய வாசிம் அக்ரம்

Mickey Arthur 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு நிர்ணயித்த 191 ரன்கள் இலக்கை கேப்டன் ரோகித் சர்மா அசால்டாக 86 ரன்களை அடித்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார்.

அதனால் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகள் பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தி வருகிறது. அதை விட உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

வேலைய மட்டும் பாருங்க:
மறுபுறம் 5 விக்கெட்டுகள் எடுத்து வீழ்த்துவேன் இந்திய ரசிகர்களிடம் சொன்ன சாகின் அப்ரிடி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” பாடல் ஒலிபரப்பப்பட்டதாகவும் பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஆனால் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” எனும் உத்வேக பாடல் ஒலிபரப்புப்படவில்லை என்று விமர்சித்த அவர் இது ஐசிசி நடத்தும் தொடரை போல் அல்லாமல் பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக வெளிப்படையாக சாடினார். அதை விட எஞ்சிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இவை அனைத்திற்கும் ஃபைனலில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் அவர் பேசியது பரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் எந்த வேலைக்கு வந்தீர்களோ அதை செய்யாமல் இந்தியா மீது பழி போட்டு சம்பந்தமின்றி பேச வேண்டாம் என்று அவருக்கு வாசிம் அக்ரம் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக இயக்குனராக இருக்கும் நீங்கள் எடுத்துக்காட்டாக குல்தீப் யாதவை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பும் அக்ரம் இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: கேப்டன் செய்த தவறால் உலககோப்பையில் படைக்கவிருந்த மாபெரும் சாதனையை தவறவிட்ட குர்பாஸ் – என்ன நடந்தது?

“இப்படி ஒரு கருத்தை சொல்வதற்கான தேவை என்ன என்று எனக்கு தெரியவில்லை. இந்த சமயத்தில் குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களுடைய திட்டம் என்ன என்பதை என்னிடம் சொல்லுங்கள் பார்ப்போம். அதைப் பற்றி தான் நீங்கள் பேச வேண்டுமே தவிர சம்பந்தமற்ற ஏதோ ஒன்றை பேச வேண்டிய அவசியமில்லை. இப்படி பேசுவதால் நீங்கள் தோல்வியிலிருந்து நீங்கள் நகர முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் வெற்றி தோல்வி என்பது சகஜமாகும். ஆனால் ஏன் இவ்வளவு மோசமாக தோற்றீர்கள் என்பதற்கான காரணம் தெரிய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement