கேப்டன் செய்த தவறால் உலககோப்பையில் படைக்கவிருந்த மாபெரும் சாதனையை தவறவிட்ட குர்பாஸ் – என்ன நடந்தது?

Gurbaz
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த தொடரின் 13-வது லீக் போட்டியானது இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49.5 ஓவர்களில் 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 80 ரன்களையும், இக்ரம் அலிகில் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக விளையாடிய குர்பாஸ் உலக கோப்பை வரலாற்றில் படைக்கவிருந்த மிகப்பெரிய சாதனையை அந்த அணியின் கேப்டன் செய்த தவறால் தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து பவுலர்களை அதிரடியாக கையாண்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 57 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 80 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் விரைவாக சதம் அடித்து உலக கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்றாவது விக்கெட்டாக அவர் ரன் அவுட்டாகி வெளியேறியது அனைவரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது 122 ரன்களுக்கு 2 விக்கெட் என்கிற நிலையில் ரஹ்மத் ஷா 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வேளையில் அடுத்ததாக களத்திற்கு வந்த அந்த அணியின் கேப்டன் ஷாகிதி தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எடுக்க நினைத்து பந்தை தட்டி விட்டு ஓட நினைத்தார். ஆனால் அவர் அடித்த பந்து கவர் பீல்டரை கூட தாண்டாத நிலையில் பந்தினை பிடித்த டேவிட் வில்லி ஜாஸ் பட்லரிடம் த்ரோ அடித்தார்.

இதையும் படிங்க : 27 மீ தூரம்.. 154 கி.மீ வேகம்.. பாக் வீரரை மிஞ்சி இங்கிலாந்து வீரர் படைத்த அசத்தல் சாதனை – விவரம் இதோ

அதன் காரணமாக 80 ரன்களில் இருந்த குர்பாஸ் பரிதாபமாக ரன் அவுட்டானார். அந்த ரன் அவுட் மட்டும் நடக்காமல் இருந்தால் நிச்சயம் அவர் சதம் அடிப்பது மட்டுமின்றி மேலும் ரன்களையும் அடித்திருக்கக்கூடும். கையில் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தும் கேப்டனின் தவறான அழைப்பின் காரணமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் தவறவிட்டது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement