27 மீ தூரம்.. 154 கி.மீ வேகம்.. பாக் வீரரை மிஞ்சி இங்கிலாந்து வீரர் படைத்த அசத்தல் சாதனை – விவரம் இதோ

Mark Wood
- Advertisement -

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் இப்ராஹிம் ஜாட்ரான் – ரஹ்துல்லா குர்பஸ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 16.4 ஓவரிலேயே 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு பெரிய சவாலை கொடுத்தது. ஆனால் அதில் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட இப்ராஹிம் ஜாட்ரானை 18 ரன்களில் அவுட்டாக்கிய அடில் ரசித் அடுத்ததாக வந்த ரஹீல் ஷா’வையும் 3 ரன்களில் தன்னுடைய சிறப்பான சுழலால் வீழ்த்தினார்.

- Advertisement -

மார்க் வுட் வேகம்:
போதாகுறைக்கு அதே ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரஹமதுல்லா குர்பாஸ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 80 (57) ரன்களில் துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அதனால் திடீரென 122/3 என்ற சரிவை சந்தித்த அந்த அணிக்கு கேப்டன் ஷாகிதி 14, ஓமர்சாய் 19 ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் முகமது நபி 9 ரன்களில் மார்க் அதிரடி வேகத்தில் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக பெரும்பாலும் மைதானத்தின் பாதியிலிருந்து சுமார் 27 மீட்டர்கள் ஓடிவந்த மார்க் வுட் 154 கி.மீ வேகப்பந்தை வீசி இந்த உலகக்கோப்பையில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் 150, தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்சி 149 கி.மீ வேகத்தில் வீசி அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 190/6 என சரிந்த ஆப்கானிஸ்தான் 250 ரன்கள் தாண்டாத என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இக்ரம் கில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3 பவுண்டரை 2 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் ரஷித் கான் அதிரடியாக 23 (22) ரன்களும் முஜீப் உர் ரகுமான் 28 (16) ரன்களும் எடுத்ததால் ஓரளவு தப்பிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: 27 மீ தூரம்.. 154 கி.மீ வேகம்.. பாக் வீரரை மிஞ்சி இங்கிலாந்து வீரர் படைத்த அசத்தல் சாதனை – விவரம் இதோ

மறுபுறம் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்டுகளையும் மார்க் அவுட் 2 விக்கெட்டுகளையும் லியாம் லிவிங்ஸ்டன், ஜோ ரூட் மற்றும் ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். இதைத்தொடர்ந்து தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் பந்து வீசும் நிலையில் 2வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

Advertisement