இந்திய அணியில் புதுமை.. விராட், தாக்கூரை தொடர்ந்து.. ராகுல் கழுத்துக்கு வந்த ஸ்பெஷல் மெடல்

Best Fielder
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை களமிறங்கிய 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெறும் 200 ரன்களை துரத்திய இந்தியா 2/3 என சரிந்தும் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மாவின் அதிரடியான சதத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

- Advertisement -

ஸ்பெஷல் மெடல்:
அதன் பின் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை வெறும் 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ரோகித் சர்மாவின் சரவெடி பேட்டிங்கால் ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து மிரட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் என்ற விருது இந்த உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1999இல் ஹெர்சல் கிப்ஸ் கேட்ச் விட்டதால் தென்னாப்பிரிக்கா கோப்பையை தவறவிட்டதை போல ஃபீல்டிங் என்பது உலகக்கோப்பை வெற்றியில் காலம் காலமாக முக்கிய பங்காற்றி வருகிறது.

எனவே இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஃபீல்டிங் செய்து வெற்றியில் முக்கிய பங்காற்றும் வீரருக்கு அதன் முடிவில் சிறந்த ஃபீல்டர் என்ற விருது இந்திய அணி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மிட்சேல் மார்ஷ் கொடுத்த கேட்ச்சை சிறுத்தையை போல் தாவி பிடித்து சிறப்பாக ஃபீல்டிங் செய்த விராட் கோலி முதலாவதாக அந்த விருதை வென்றார்.

- Advertisement -

அதை தம்முடைய கழுத்தில் போடுமாறு கேட்டு வாங்கிய அவர் வாயில் கடித்து போஸ் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லி நடைபெற்ற போட்டியில் பவுண்டரி எல்லையில் நின்று சிறப்பான கேட்ச் பிடித்த தாக்கூர் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் அப்போட்டியின் முடிவில் விராட் கோலி அந்த விருதை அவருடைய கழுத்தில் அணிவித்து பாராட்டினார்.

இதையும் படிங்க: நான் ஏற்கனவே சொன்னது தான் அவர் கேப்டனா இருக்கக்கூடாது. பேட்ஸ்மேனா தான் இருக்கனும் – சோயிப் மாலிக் அதிரடி

அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக கீப்பிங்கில் அபாரமான கேட்ச் பிடித்த கேஎல் ராகுல் தற்போது அந்த விருதை வென்றுள்ளார். அதை இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் அறிவித்த நிலையில் இந்திய வீரர்களின் ஆரவாரமான கரகோஷத்திற்கு மத்தியில் தாக்கூர் தம்மிடமிருந்த மெடலை ராகுல் கழுத்தில் அணிவித்தார். அந்த வகையில் ஆரோக்கியமான போட்டியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த விருதை அறிமுகப்படுத்தியுள்ளதற்கு இந்திய நிர்வாகத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement