நான் ஏற்கனவே சொன்னது தான் அவர் கேப்டனா இருக்கக்கூடாது. பேட்ஸ்மேனா தான் இருக்கனும் – சோயிப் மாலிக் அதிரடி

Shoaib-Malik
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று அக்டோபர் 14-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதிலும் குறிப்பாக நேற்றைய டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததும் பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்கள் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நல்ல நிலையில் இருந்தது.

- Advertisement -

அவ்வேளையில் அடுத்த 36 ரன்களுக்குள் மீதமுள்ள ஏழு விக்கெட்டுகளும் விழுந்து அந்த அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 30.3 ஓவர்களிலேயே 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக பல்வேறு முன்னாள் வீரர்களும் சுட்டிக்காட்டி இருந்தனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான சோயிப் மாலிக் பாபர் அசாம் கேப்டனாக இருக்கக் கூடாது என்று நேரடியாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே கூறியது போன்றது தான் இப்போதும் கூறுகிறேன்.

- Advertisement -

பாபர் அசாம் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏனெனில் பாபர் அசாம் கேப்டனாக பெரிய அளவில் வெளியில் சென்று சோபிக்க முடியவில்லை. அவர் கேப்டன்சி செய்வதை விட ஒரு பேட்ஸ்மனாக பாகிஸ்தான் அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்க முடியும். எனவே அவர் தற்போது கேப்டன் பதவியிலிருந்து வெளியேறுவது அணிக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாட்டு கேட்க வந்தீங்களா விளையாட வந்தீங்களா? இலங்கை புகார் செய்யலயே.. ஆர்தருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

தற்போதைய ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் மூன்று பேட்ஸ்மேன்கள் டாப் 10 இடங்களுக்குள் இருக்கும் வேளையில் நேற்றைய போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தற்போது பெரிய அளவில் பலவீனமாக காணப்படுவதால் அவர்களது குறையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement