2023 உ.கோ தோல்விக்கு இந்திய பிளேயர்ஸ் காரணமில்ல.. நீங்க 2 பேர் தான் காரணம்.. வாசிம் அக்ரம் விளாசல்

Wasim Akram 55
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா கைக்கு கிடைத்த கோப்பையை முத்தமிட முடியாமல் தவற விட்டது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே மிரட்டலாக செயல்பட்ட இந்தியா லீக் சுற்றில் சந்திக்காத ஒரே அணியாக சாதனை படைத்து செமி ஃபைனலில் நியூசிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை தெறிக்க விட்டது.

அதனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த வகையில் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மீண்டும் இந்தியா தோல்வியை சந்தித்தது கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

வாசிம் அக்ரம் விமர்சனம்:
இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் ஃபைனலுக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் ஃபைனலில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை துவங்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்த தோல்வியிலிருந்து இந்திய நாடு வெளிவருவது கடினம் என்பதை நான் புரிந்து கொள்வேன். ஏனெனில் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடி 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது. ஆனால் தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் ஃபைனல் நடைபெறுவதற்கு முன்பாகவே இந்தியாவை உலக சாம்பியனாக மாற்றினார்கள். இந்த தவறை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும்”

- Advertisement -

“அதே சமயம் உங்களுடைய அணி சிறப்பாக விளையாடியதால் நம்பிக்கையும் அதிகரித்தது. எனவே மொத்த தவறும் உங்களுடையது கிடையாது. ஒரு மோசமான போட்டியால் அனைத்தும் நழுவி சென்றது. அதற்கான பாராட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் 11 – 40 வரையிலான மிடில் ஓவர்களில் இந்தியா சில பவுண்டரிகள் மட்டுமே அடித்தனர். சூரியகுமாருக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் ஒரு வேகமான பந்தை கூட வீசாமல் சரியான ஃபீல்டர்களை நிறுத்தி திட்டத்துடன் செயல்பட்டார்கள்”

இதையும் படிங்க: குஜராத் டைட்டன்ஸ் அணி தப்பா முடிவு எடுத்துட்டாங்களா? சுப்மன் கில் கேப்டன் பதவி பற்றி – ஹர்ஷா போக்ளே கருத்து

“ஆனாலும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா ஃபைனலில் தோற்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 1999 கோப்பை ஃபைனலில் நாங்கள் தோற்றதை பற்றி இப்போதும் என்னிடம் கேட்கிறார்கள். குறிப்பாக டாஸ் வென்று ஏன் பேட்டிங் செய்யவில்லை என்று என்னிடம் கேட்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் நிலவும் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்தியா அடுத்ததாக 6 மாதத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement