குஜராத் டைட்டன்ஸ் அணி தப்பா முடிவு எடுத்துட்டாங்களா? சுப்மன் கில் கேப்டன் பதவி பற்றி – ஹர்ஷா போக்ளே கருத்து

Harsha-and-Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும், வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். மேலும் டிரேடிங் முறையில் சில வீரர்கள் அணி மாற்றமும் செய்யப்பட்டு அதன் அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்சி செய்து வந்த ஹார்டிக் பாண்டியா மீண்டும் டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக தற்போது 24 வயதாகும் சுப்மன் கில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று குஜராத் அணியின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

கடந்த சீசனில் 890 ரன்கள் அடித்து விராட் கோலிக்கு அடுத்து ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த கில் தனது கரியரின் உச்சகட்ட சிறப்பான செயல்பாட்டில் இருக்கும் வேளையில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாலும், வருங்காலத்தில் அவர் இந்திய அணியின் கேப்டனாக கூட வாய்ப்பு இருப்பதனாலே அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து குஜராத் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில் குஜராத் அணி முன்கூட்டியே அவரை கேப்டனாக்கி தவறு செய்து விட்டார்களோ? என்கிற அடிப்படையில் தற்போது பிரபல கிரிக்கெட் விமர்சகரும், நிபுணருமான ஹர்ஷா போக்லே தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : சுப்மன் கில்லுக்கு மிக விரைவாக அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

- Advertisement -

இந்த ஆண்டு அவருக்கு பேட்ஸ்மேனாக ஒரு நல்ல ஆண்டாக அமைந்த வேளையில் அடுத்தடுத்து பெரிய பெரிய தொடர்களிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். தற்போது அவர் தனது அனுபவத்தை வளர்க்கும் நேரம் என்று கருதுகிறேன். என்னை பொறுத்தவரை அடுத்த ஆண்டு குஜராத் அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் இருந்தால் அவரிடம் இருந்து நிறைய கேப்டன்சி அனுபவங்களை கற்றுக்கொண்டு 2025-இல் சுப்மன் கில் கேப்டனாக மாற்றி இருக்கலாம் அது சரியாக இருந்திருக்கும் என்பது போன்று போக்லே அவர்கள் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 5 ஆவது இந்திய கேப்டனாக சுப்மன் கில் ஐ.பி.எல் வரலாற்றில் நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ

அவரது இந்த கருத்தும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக தான் உள்ளது. ஏனெனில் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் கேப்டன்சி அழுத்தத்தால் பேட்டிங்கில் சொதப்புவதை விட ஒரு நல்ல கேப்டனிடம் இருந்து அனுபவங்களை பெற்றுக்கொண்டு ஓராண்டு கழித்து கேட்டனாக மாறியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். இருப்பினும் சுப்மன் கில் இதற்கு முன்னதாக உள்ளூர் தொடர்களான துலீப் டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement