5 ஆவது இந்திய கேப்டனாக சுப்மன் கில் ஐ.பி.எல் வரலாற்றில் நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ

Gill
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை அவர் விளையாடியுள்ள 6 சீசன்களிலும் சேர்த்து மொத்தமாக 91 போட்டியில் விளையாடியுள்ள அவர் 37 ரன்கள் சராசரியுடன் 134 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2790 ரன்கள் குவித்துள்ளார். கடந்து 2022-ஆம் ஆண்டிற்கு முன்னதாக கொல்கத்தா அணி அவரை தங்களது அணியிலிருந்து கழட்டி விட்டது.

அப்படி கழட்டிவிடப்பட்ட அவரை குஜராத் அணி நேரடியாக தங்களது அணியில் தேர்வு செய்து துவக்க வீரராக விளையாட வைத்தது. அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு தற்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

- Advertisement -

ஆம் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் ஏலமானது ஏப்ரல் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்ற விரும்பும் வீரர்களையும் தக்கவைக்கும் விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 26-ஆம் தேதி வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

அதேபோன்று அணிகளுக்கு இடையே வீரர்களை டிரேடிங் செய்ய விரும்பினாலும் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் செய்யப்பட்டுள்ளதால் தற்போது குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு அவர் கேப்டன் பதவியை ஏற்க இருப்பதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது இந்திய கேப்டனாக ஒரு முக்கிய சாதனையில் இணைய உள்ளார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஐந்தாவது இந்திய வீரராக அவர் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : சூர்யகுமாரை அவரோட கம்பேர் பண்ணாதீங்க.. லெஜெண்ட் கிறிஸ் கெயில் வித்யாசமான கருத்து

இந்த பட்டியலில் விராட் கோலி 22 வயதில் பெங்களூரு அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்று குறைந்த வயதில் ஐபிஎல் கேப்டன் பொறுப்பை ஏற்ற இந்திய வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் ஆகியோர் 23 வயதிலும் தற்போது அவர்களை தொடர்ந்து சுப்மன் கில் ஐந்தாவது வீரராக 24 வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement