சூர்யகுமாரை அவரோட கம்பேர் பண்ணாதீங்க.. லெஜெண்ட் கிறிஸ் கெயில் வித்யாசமான கருத்து

Chris Gayle
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

முன்னதாக இந்த தொடரில் பாண்டியா காயமடைந்ததால் தற்காலிக கேப்டனாக சூரியகுமார் யாதவ் இந்தியாவை வழி நடத்தி வருகிறார். குறிப்பாக 2023 உலகக்கோப்பை ஃபைனலில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு செட்டாக மாட்டேன் என்று மீண்டும் ஆழமாக நிரூபித்துள்ளார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் இத்தொடரில் அவர் தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது என்னுடைய ஏரியா என்பது போல் முதல் டி20 போட்டியிலேயே 80 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தன்னை உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார்.

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே எதிரணிகள் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத வித்தியாசமான ஷாட்டுகளால் அடித்து நொறுக்கும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதே போல சூரியகுமார் தான் உலகின் புதிய யுனிவர்சல் பாஸ் என்றும் சில முன்னாள் வீரர்கள் ஏற்கனவே பாராட்டியிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சூரியகுமாரை தம்முடன் ஒப்பிட வேண்டாம் என்று கிறிஸ் கெயில் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது கிறிஸ் கெயில் தான் அதிரடியாக எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து யுனிவர்சல் பாஸ் என்ற பெயரை முதல் முறையாக பெற்றார். எனவே யுனிவர்சல் பாஸ் என்பவர் தாம் மட்டுமே என்று தெரிவிக்கும் கெயில் இது பற்றி சமீபத்திய பேட்டியில் ஜாலியாக பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவர டார்ச்சர் பண்ணாம ஃப்ரீயா விளையாட விடுங்கப்பா.. ரசிகர்களுக்கு ஹர்ஷா போக்லே கோரிக்கை

“இல்லை. இந்த உலகில் வேறு யாரும் கெயில் போல இல்லை. வருங்காலத்திலும் இங்கே யாரும் கெயில் போல இருக்கப் போவதில்லை. சொல்லப்போனால் எப்போதுமே கெயில் போன்ற ஒருவர் இருக்கப் போவதில்லை. ஏனெனில் யுனிவர்சல் பாஸ் என்பவர் ஒரே ஒருவர் மட்டுமே” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய 3வது போட்டியில் நவம்பர் 28ஆம் தேதி கௌகாத்தி நகரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement