அவர டார்ச்சர் பண்ணாம ஃப்ரீயா விளையாட விடுங்கப்பா.. ரசிகர்களுக்கு ஹர்ஷா போக்லே கோரிக்கை

Haesha Bhogle
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் சூரியகுமார் தலைமையில் விளையாடி வரும் இத்தொடரில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் போன்ற நிறைய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதில் உச்சகட்டமாக ரிங்கு சிங் லோயர் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

ஃப்ரீயா விடுங்க:
குறிப்பாக முதல் போட்டியில் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது அசால்டான சிக்சர் அடித்து 22* (14) ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் 2வது போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 31* (9) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் ஏற்கனவே அயர்லாந்து தொடரிலும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் முக்கிய நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவரை இந்திய அணியின் புதிய ஃபினிசராக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

அதிலும் ஐபிஎல் தொடரில் கடைசி ஓவர் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த திறமை கொண்ட அவர் தோனி போல இந்தியாவின் அடுத்த ஃபினிஷராக வருவார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த தோனியாக வருவார் என்று சொல்லி ரிங்குவுக்கு தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்காதீர்கள் என ரசிகர்களிடம் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது கொண்டு வருமாறு. “தோனி போல ரிங்கு ஃபினிஷிங் செய்கிறார் என்று சில செய்திகளை படித்தேன். இந்த நிலையை எட்டுவதற்கு கடினமாக உழைத்த அவர் அற்புதமான திறமை கொண்டவர். ஆனால் முதலில் அவரை விளையாட விடுங்கள். இந்த இளம் வீரரை கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக ரிங்குவாக மட்டும் விளையாட விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அவர டார்ச்சர் பண்ணாம ஃப்ரீயா விளையாட விடுங்கப்பா.. ரசிகர்களுக்கு ஹர்ஷா போக்லே கோரிக்கை

அவர் கூறுவது போல இப்போதே தோனிக்கு நிகராக ஒப்பிடுவது கண்டிப்பாக ரிங்கு சிங்கிற்க்கு தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கும் என்றே சொல்லலாம். எனவே இந்த ஒப்பீடுகள் இல்லாமல் சுதந்திரமாக விளையாடவிட்டால் நாளடைவில் தோனியை மிஞ்சும் அளவுக்கு ரிங்கு விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement