குழந்தை பிறக்க இருப்பதை காரணம் காட்டி ஆர்.சி.பி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர் – வெளியான தகவல்

RCB
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் ஐபிஎல் 2024-ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஏலமும் நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏலம் இருக்காது என்பதனால் ஒவ்வொரு அணியுமே தாங்கள் தேர்வு செய்ய இருக்கும் வீரர்கள் குறித்த திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்த ஏலம் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது இது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்பாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களையும், தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டது.

- Advertisement -

ஏற்கனவே ஒவ்வொரு அணியும் தங்களது உறுதி செய்யப்பட்ட அணியை நவம்பர் 26-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்களது உறுதி செய்யப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டனர்.

அதில் ஒரு சில வீரர்கள் வெளியேற்றப்பட்டதற்கு சில காரணங்களும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ் ஹேசல்வுட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஆர்சிபி அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து வெளியான தகவலின் படி ஆர்.சி.பி அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவிக்கையில் : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ் ஹேசல்வுட்டிற்கு குழந்தை பிறக்க இருக்கிறது. அதன் காரணமாக அவர் பாதி தொடர் வரை விளையாட முடியாமல் போகலாம். அதன் காரணமாகவே அவரை அணியில் இருந்து வெளியேற்றுவதாக உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க : அதுக்காக தான் இதை பண்ணிருந்தா உங்க தரத்தை நீங்களே கெடுத்துட்டீங்க.. பாண்டியா மீது ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

அவரோடு சேர்ந்து வெளிநாட்டு வீரர்களாக வனிந்து ஹசரங்கா, பின் ஆலன், மைக்கல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெயின் பார்னல் ஆகிய வீரர்களை அந்த அணி கழட்டி விட்டுள்ளது. அதோடு டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து அவர்கள் கேமரூன் கிரீனை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement