மைதானம் காலின்னு யார் சொன்னா? இந்தியாவை கிண்டலடித்த பாக் ரசிகர்களுக்கு.. வாசிம் அக்ரம் பதிலடி

Wasim Akram
- Advertisement -

ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன்களை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று தங்களுடைய பயணத்தை வெற்றியுடன் துவக்கி அசத்தியுள்ளது.

முன்னதாக அப்போட்டி நடைபெற்ற அகமதாபாத் மைதானத்திற்கு குறைந்தளவு ரசிகர்கள் மட்டுமே வந்தது மிகப்பெரிய சர்ச்சையாகவும் இந்திய ரசிகர்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அதாவது பொதுவாகவே ஐசிசி உலகக்கோப்பையின் ஓப்பனிங் போட்டியில் எந்த நாடு விளையாடினாலும் அதை பார்ப்பதற்கு மைதானத்தின் ஒரு இருக்கை கூட மீதம் இருக்காத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிவது வழக்கமாகும்.

- Advertisement -

வாசிம் அக்ரம் பதிலடி:
அந்த சூழ்நிலையில் இப்போட்டி 132000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக உலக சாதனை படைத்துள்ள அகமதாபாத் நகரில் நடைபெற்றது. ஆனால் அதில் போட்டி துவங்கும் போது வெறும் 10000 ரசிகர்கள் கூட இல்லாததால் மைதானமும் காலியாக இருந்தது பலருக்கும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்தது.

மறுபுறம் இது தான் சமயம் என காத்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் பணக்கார வாரியம் உலகின் மிகப்பெரிய மைதானம் என்று பெருமை பேசும் உங்களுடைய நாட்டில் மாபெரும் உலகக்கோப்பையின் முதல் போட்டியை பார்ப்பதற்கு கூட ஆள் இல்லையா என்று கிண்டலடித்தார்கள். மேலும் உலகின் பணக்கார வாரியம் என்று பேசும் நீங்கள் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவிருந்த துவக்க விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்தது ஏன் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

- Advertisement -

இருப்பினும் நேற்று வியாழக்கிழமை என்பதால் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை கிடைக்காது என்பதுடன் மதிய நேரத்தில் வெயிலால் பெரும்பாலானவர்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று இந்திய ரசிகர்கள் பதிலளித்தனர். இறுதியில் நேரம் செல்ல செல்ல அதிகப்படியான ரசிகர்கள் வந்து போட்டி முடியும் போதெல்லாம் மொத்தமாக 47518 பேர் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியை கண்டு களித்ததாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியை தவறவிட இருக்கும் சுப்மன் கில் – எதற்கு தெரியுமா?

இந்நிலையில் ஏ ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முதல் போட்டிக்கு ரசிகர்கள் வராதது ஏன் என்று செய்தியாளர் வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் “அகமதாபாத் கூட்டத்தைப் பற்றி பேசுவது தேவையற்றது. ஏனெனில் 1 ரசிகர்கள் அமரக்கூடிய மைதானத்தில் 40000 ரசிகர்கள் இருந்தால் கூட காலியாக இருப்பது போலவே தோன்றும்” என்று கிண்டலடித்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார். மேலும் அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் “இதுவே கராச்சி மைதானமாக இருந்தால் இதே 40,000 ரசிகர்களால் நிரம்பி இருக்கும்” என்று பதிலளித்தது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement